Header Ads



கரை­யோர மாவட்ட கோரிக்கையை எதிர்க்கிறோம், மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் உடன்பட்டது

கரை­யோர மாவட்ட பரி­பா­லனக் கோரிக்கை தொடர்பில் ரவூப் ஹக்­கீ­மிற்கும் மைத்­தி­ரிக்­கு­மி­டையில் இர­க­சிய ஒப்­பந்தம் ஏதுமில்லை. அதற்கு நாம் உடன்­ப­டவும் மாட்டோம். மு.கா.வினர் பொதுவேட்­பா­ளரின் விஞ்­ஞா­ப­னத்­திற்கு மாத்­தி­ரமே உடன்­பட்டு வருகை தந்­துள்­ளனர். இந்த கூட்­ட­ணியில் பரஸ்­பர கொள்­கைக்கு இட­மில்லை என ஜாதிக ஹெல உறு­ம­யவின் பொது செய­லாளர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.

மேலும், மஹிந்த ராஜ­பக்ஷ அவ­சர பாரா­ளு­மன்­றத்தை கூட்டி அர­சி­ய­ல­மைப்பின் 13ஆவது திருத்­தத்தில் ஒரு எழுத்­தை­யேனும் மாற்­றி­ய­மைத்தால் நாம் ஜனா­தி­ப­தி­யுடன் இணைவோம். எனினும் அவரால் அதனை செய்ய இய­லாது எனவும் அவர் சாடினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜ­பக்ஷ பத­வி­யேற்­ற­போது சமா­தான உடன்­ப­டிக்­கையை பாது­காக்­கவே நாம் முனைந்தோம். எனினும் சமா­தான உடன்­ப­டிக்­கையை மீறும் வகையில் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கொல்லமுனைந்த சம­யமும் ஜெனரல் சரத் பொன்­சேகா தாக்­கப்­பட்ட போதும் அந்த சமா­தான உடன்­ப­டிக்­கையை கிழித்­தெ­றிந்து விட்டு யுத்­தத்­திற்கு செல்­லு­மாறு மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு நாமே அழுத்தம் பிர­யோ­கித்தோம். எனினும், மஹிந்த ராஜ­பக்ஷ ஜெனி­வாவில் விடு­தலை புலி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தி­லேயே முன்­னிலை வகித்தார்.

ஒவ்­வொரு தரு­ணமும் நாட்டின் பய­ணத்தை நாமே தீர்­மா­னித்தோம். எதிர்­கா­லத்­திலும் அவ்­வாறே எமது செயற்­பா­டுகள் காணப்­படும். மேலும், அர­சி­ய­ல­மைப்பின் 13ஆவது திருத்த சட்­டத்தை அமுல்­ப­டுத்­தி­யது மஹிந்த ராஜ­ப­க்ஷ­வாகும். வட மாகாண சபையை மீள ஸ்தாபித்­தது மஹிந்த ராஜ­ப­க்ஷவே. இதனை ரணிலோ, சந்­தி­ரி­காவோ செய்­ய­வில்லை.

நாம் மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு சவால் விடுக்­கிறோம். ஜனா­தி­பதி அதி­கா­ரங்­களை பிர­யோகம் செய்து பாரா­ளு­மன்­றத்தை உட­ன­டி­யாக கூட்டி, அர­சி­ய­ல­மைப்பின் 13ஆவது திருத்த சட்­டத்­தி­லுள்ள ஒரு எழுத்­தை­யேனும் மாற்ற வேண்டும். அதன்­போது ஜனா­தி­ப­திக்கு நாம் ஆத­ர­வ­ளிக்க தயார். எனினும் அதனை அவர் நிறை­வேற்­றப்­போ­வ­தில்லை.

பெளத்த சிங்­கள மக்­க­ளுக்­காக தொடர்ந்தும் குரல் கொடுத்­தது நாமே. பொது­ப­ல­சேனா தற்­போது மக்­களின் கவ­னத்தை திசை திருப்ப முனை­கின்­றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எதி­ர­ணி­யுடன் இணைந்­துள்­ளனர். தற்­போது ஹக்கீம் - மைத்­திரி இர­க­சிய ஒப்­பந்தம் இருப்­ப­தாக குற்றம் சுமத்­து­கின்­றனர். எனினும் மு.கா. வின் கரை­யோர மாவட்ட பரி­பா­லன கோரிக்கை தொடர்பில் ரவூப் ஹக்­கீ­மிற்கும் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்­கு­மி­டையே எந்தவொரு இரகசிய ஒப்பந்தமும் இல்லை. மாறாக பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மீது உடன்பட்டே மு.கா. எதிரணியுடன் இணைந்தது.பொது வேட்பாளரின் விஞ்ஞாபனத்திற்கு உடன்பட்டால் எவரும் எதிரணியுடன் இணைந்து கொள்ளலாம் என்றார்.

No comments

Powered by Blogger.