Header Ads



ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும், கிழக்கு மாகாண ஆட்சி குறித்து முஸ்லிம் காங்கிரஸுடன் பேசுவோம் - சம்பந்தன்

-அஸ்ரப் ஏ சமத்-

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனாவுக்கு பூரண ஆதரவு. தமிழ் மக்கள் மைத்திரபால சிறிசேனாவை ஆதரிக்குமாறு இன்று கொழும்பு ஜனாஹி ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ரி.என்.ஏ தலைவர்.  இரா சம்பந்தன் தெரிவித்தார்.

சுயாதீன ஆணைக்குழு அமைத்து நிறைவேற்று ஜனாதிபதிமுறையை ஒழிக்கும் திட்டத்திற்கு மைத்திரிக்கு நாங்கள் ஆதரவு தெரவிக்கின்றோம்.
இம் மாநாட்டில் சுமந்திரன், புளோட் - சித்தாத்தன், ஈ.பி.எல்.ஆர், செல்வன் அடைக்கலநாதன், தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோறும் கலந்து கொண்டனர்.

இராசம்பந்தன் - நாடு சர்வதிகார ஆட்சியை நோக்கிச் செல்கின்றது. 

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையினால் நீதித்துறை, உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம்,  பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றப்பிரேரணை. 18வது சட்டத் திருத்தம்,ராஜபக்ச அரசால் கடந்த 10 வருடகலாமாக சிறுபாண்மைக்கு ஏமாற்றம். அரச நிர்வாகத்தின் முக்கிய பதவிகளுக்கு சுயாதீன நியமணங்கள் நேர்மையின்மை. வட கிழக்கில் கண்முடித்தணமாக காணிக்கொள்ளையிடுகின்றனர். தமிழ் மக்களுக்கு உயிர் உடைமை பாரிய அளிவில் அழிவு.

2005ல் விடுதலைப்புலிகளே நடு நிலை வகித்தால் தான் அவர் ஜனாதிபதியானார். 17வது சர்த்தை மாற்றியதன் முலம் நாட்டுக்கு பாரிய அநீதி.
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி எதேச்சதிகாரமானது நீதி, ஊடகம், பொலிஸ், நிர்வாகம், தேர்தல், இலஞ்சம். ஆகிய ஆணைக்குழு இல்லாமை இந்த அரசில் ;அநீதிகள் இழைக்கப்பட்டு வருகின்றது.

தமிழ் பேசும் மக்களுக்கு பாதகமாகவே  செயற்பட்டு வந்துள்ளது. தமிழ் மக்களது காணிகளை அபகரிப்பு  வடகிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு துண்பங்கள். வாழ்வாதாரமோ வீடுகளோ இல்லை.

அஸ்ரப் ஏ சமத் கேள்வி- 

கிழக்கு மாகணசபையில் முஸ்லீம் காங்கிரஸ் விலகியதால் மாகணசபையில் எதிர்கட்சி  26ஆகவும் அரசில் 10 ஆகவும் உள்ளது. இதனால் நீங்கள் ஆட்சியமைப்பீர்களா ?

சம்பந்தன் -இந்தத் தேர்தல் நடக்குமுன்பே முஸ்லீம் காங்கிரஸிடம் ஆட்சியமைப்போம். என கூறியிருந்தோம். ஜனாதிபதித்  தேர்தல் முடிந்ததும் அவ்விடயம் பற்றி உரியவர்களிடம் பேசுவோம்.

அஸ்ரப் ஏ சமத் கேள்வி முஸ்லீம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்பேசும் பிரதேசங்களை இணைந்து கரையோர மாவட்டம் கேட்டுள்ள்தே அதனை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா ?

சம்பந்தன் - சிறுபாண்மைங்களது நிர்வாகப் பிரச்சினைகளுக்கு கட்டாயம் தீர்வு காணப்படல் வேண்டும்.

அஸ்ரப் ஏ சமத் கேள்வி  முன்னாள் ஜ.தே.கட்சி செயலாளர் திஸ்ச அத்தநாயக்க சொல்கின்றார் நீங்கள் மைத்திரி, ரணில் சந்திரிகாவோடு அந்தரங்க ஒப்பந்தமொன்று செய்துள்ளதாக.
அவர் ஒரு கேமாளி அவர் சொல்வதை நாங்கள் நம்பத் தயாரில்லை.

இர்பாண் மொஹமட் - 13வது திருத்தும் மற்றும் பொலிஸ், காணி அதிகாரம் மற்றும் இராணுவ குறைப்பு பற்றி நிங்கள் பேசி வருகின்றீர்கள் இவ்விடயம் பற்றி எதிர்கட்சி வேட்பாளர் ஏதாவதும் ஒப்புதல் வாக்கு தந்துள்ளாரா.

சிறுபாண்மை மக்களது பிரச்சிணைகளுக்கு யார் ஜணாதிபதி பதவிக்கு வந்தாலும் அதனை செய்ய வேண்டும். பதவியேற்றதும் அவர்களது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஏதிர்க்கட்சியில் சிகல உருமைய உள்ளது. அது எதனையும் கொடுக்க விடாது ?
அவர்கள் ஏற்கனவே அரசாங்கத்தில் இருந்தவர்கள் அவர்கள் பற்றி எங்களுக்க பிரச்சினை இல்லை.

அஸ்ரப் ஏ சமத் இன்று 2 மணிக்கு யாழ்ப்hணத்தில் மைத்திரிபாலசிறிசேனாவின் தேர்தல் நடக்கின்றது. இதில் கலந்து கொள்வீர்களா?

நாங்கள் இன்று கொழும்பல் உள்ளோம். ஏதிர்வரும் 5 நாட்களில் அவ்விடயம் பற்றி உரியவர்களிடம் பேசுவோம். இன்று இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் உங்கள் ஊடாக தமிழ் மக்களை மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்கும் படி கேட்டுக்கொள்கின்றோம்.

No comments

Powered by Blogger.