கறுப்பு, வெள்ளை நிறத்தில் தக்காளி உற்பத்தி - சீன விவசாயி சாதனை
தக்காளி காயாக இருந்தால் பச்சை நிறத்திலும், பழமாக இருந்தால் சிகப்பு நிறத்திலும் இருக்கும். ஆனால் முதன்முதலாக சீனாவில் உள்ள விவசாயி தக்காளி கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளார். தக்காளியின் விதையில் இண்டிகோ ரோஸ் என்னும் விதையை கலந்து உருவாக்கிய புதிய விதையின் மூலம் இந்த சாதனையை செய்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது : - இத்தக்காளியின் சுவையும் மாறுபட்டதாக இருக்கும். தக்காளியை வேறு சில நிறங்களில் உற்பத்தி செய்ய நான் முடிவு செய்திருக்கின்றேன். இந்த தக்காளி தற்போது சீன சந்தையில் நன்றாக விலை போகின்றது. ஒரு கிலோ ரூ.360 வரை இந்த தக்காளி விற்பனையாகின்றது. என அந்த விவசாயி கூறியுள்ளார்.

Post a Comment