Header Ads



பிரதமர் ஜயரத்னாவின் இணைப்புசெயலாளர் மைந்திரிபால அணியுடன் இணைந்தார் (படம்)

(JM>Hafeez)

தற்போதைய ஆட்சியில் அம்பாந்தோட்டைக்கு ஒரு நீதியும் கண்டிக்கு இன்னொறு நீதியும் காணப்படுவதாகத் தெரிவித்த பிரதமர் டி.எம்.ஜயரத்னா அவர்களது இணைப்பச் செயலாளர் பி.டி.நுகலியத்தை (24.12.2014) இன்று கண்டியில் வைத்து மைந்திரிபால சிரிசேனாவின் அணியுடன் இணைந்தார்.

கண்டி,  தங்கொல்லையில் உள்ள ஐ.தே.க. கண்டி மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் லக்ஸ்மன் கிரியெல்ல அவர்களது காரியாலயத்தில் வைத்து எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது அணி வேட்பாளர் மைந்திரப்பால சிரிசேனாவை ஆதரிப்பதாகத் தெரிவித்தார். அவரது மேற்படி ஆதரவு தெரிப்பு தொடாபாக கண்டி மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் லக்ஸ்மன் கிரியெல்ல ஊடக சந்திப்பொன்றை ஒழுங்கு செய்திருந்தார். அதில் அவர் தெரிவித்ததாவது,

2009ம் ஆண்டு முதல் தான் பிரதமரின் இணைப்புச செயலாளர் பதவியில் இருந்ததாகவும் கடந்த 2013 மே; ஆண்டு மத்திய மாகாண சபைத் தேர்தலின் போது நடந்த ஒரு ஏமாற்றம் பற்றித் தெரிவித்தார். கூடுதலாக விருப்பு வாக்கு பெறும் ஒருவருக்கே முதலமைச்சு பதவி தருவதாக ஜனாதிபதி தெரிவித்ததிருந்தார். இத் தேர்தலில் தாம் ஆதரித்த அபேட்சகரான பிரதமரின் மகன் அனுராதா ஜயரத்ன அதிகூடிய வாக்ககளைப் பெற்ற போதும் அவருக்கு முதலமைச்சு எப்படிப் போனாலும் அமைச்சர் பதவி ஒன்றாவது வழங்கப்படவில்லை.  என்வு வெரும் வாய்ப்பேச்சில் மட்டுமே இவ்வரசு இயங்குவதாகவும் செயற்திறன் கொண்டதாக இலலலை என்றும் தெரிவித்தார்.

அம்பாந்தோட்டைக்கு ஒரு நீதியும் கண்டிக்கு இன்னொறு நீதியும் காணப் படுவதாகத் தெரிவித்த அவர் ஊவாவில் சபாநாயகரின் மகனுக்கு அதிகூடிய விருப்பு வாக்கு பெற்றதற்கு முதலமைச்சு வழங்க முடியுமாயின் மத்திய மாகாணத்தில் ஏன் பிரதமரின் புதவருக்கு வழங்க முடியாதுள்ளது எனவும் வினவினார்.

அது மட்டுமல்ல நாட்டின் இரண்டாவது பிரஜையாகிய பிரதமாரால் செய்யமுடியாமல் போன பணிகளை அம்பாந்தோட்டையில் இருக்கும் சாதாரண பாராளுமன்ற அங்கத்தவர்களால் செய்ய முடிகின்றது. 

ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் இணைந்தள்ள ஐ.தே.க. அங்கத்தவர்கள் இன்று மனம் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கருவேற்பிலையாகப் பயன் படுத்தப்பட்டு வருகின்றனர். கம்பலைத் தொகுதியில் மைந்திரிப்பால சிரிசேன அவர்கள் அமோக வாக்குகளைப் பெற தான் ஒத்துழைக்க உள்ளதாகவும் தனக்கு நேற்றிலிருந்து பல்வேறு அச்சுறுத்தல்கள் வந்ததாகவும் அதற்கு தான் பயப்படப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.



No comments

Powered by Blogger.