முஸ்லிம் காங்கிரஸும், தமிழ் கூட்டமைப்பும் எடுத்தமுடிவு, சிங்களவர்களை மஹிந்தவின் கீழ் அணிதிரட்டியுள்ளது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு, மேற்குலக நாடுகளுக்கு ஆயுதங்களை விற்கவும் அதன் மூலமாக இலங்கையில் மேலுமொரு இரத்தக்களரி ஏற்படவும் வழிகோலியுள்ளது என்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
100 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் மற்றும் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை, மட்டக்களப்பு மாவட்டத்தின் புதூர்; கிராம பொதுநோக்கு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கடைசி நேரத்தில் எடுத்துள்ள முடிவு, நாட்டின் தென்பகுதியிலுள்ள சிங்கள மக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் அணிதிரளச் செய்துள்ளது.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டமையால், நஷ்டம் அடைந்தவை ஆயுதங்களை விற்கும் நாடுகள். ஏனென்றால், இங்கு இப்பொழுது ஆயுதங்களை நாம் வாங்குவதில்லை. ஆயுதங்கள் மோதிக்கொள்ளாமையால், எமது பிள்ளைகள் கொல்லப்படுவது இல்லை. அங்கவீனமாவதில்லை. அகதி வாழ்க்கை இல்லை. இவற்றை சகித்துக்கொள்ளாத மேற்குலகில் ஆயுதங்களை விற்கும் சக்திகள், இப்பொழுது தமது ஆயுதங்களை எப்படியாவது விற்று பணம் சம்பாதிக்க வழி தேடுகின்றன.
மேற்குலக சக்திகள் உற்பத்தி செய்யும் ஆயுதங்களை விற்பதற்கு இலங்கையில் மீண்டும் குழப்பம் தேவை. குழப்பத்தை உண்டாக்குவதற்கு இலங்கையில் ஆட்சி மாற்றம் தேவை. அதற்காகவே, பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவையும் அவரது சகாக்களையும் களத்தில் இறக்கியுள்ளார்கள்.
அந்த சதி வலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இன்னும் பல பினாமி அமைப்புக்களும் வீழ்ந்துள்ளன. பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தால், மேற்குலக ஆக்கிரமிப்பாளர்களே ஆட்சி செலுத்தப்போகின்றார்கள். இவர்கள் அடிமைகளாக இருக்கப்போகின்றார்கள்.
காலமெல்லாம் தோற்கின்றவருக்கு வாக்களிக்குமாறு கூறி பழக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ஒருபோதும் பாதிக்கப்படமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் தங்களின் குடும்பங்களுடன் ஏற்கெனவே ஐரோப்பிய நாடுகளிலும் மேற்கு நாடுகளிலும் சொகுசாக வாழ்கின்றார்கள். நாட்டில் மேற்குலக சக்திகளால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டால், அந்த அநாவசிய யுத்தத்துக்கு பலிக்கடாவாகப்போவது அப்பாவி மக்கள் குறிப்பாக, தமிழ் மக்கள் இந்த விடயத்தில் நின்று நிதானித்து மிகக் கவனமாக முடிவு எடுக்கவேண்டும்.

You have the spoken of the one side of the page, Please see the other side and read it. Mr.Hisb... we heard, read, seen and experienced the harm from your MARA enough.
ReplyDeleteWhat you say above may or may not happen BUT what I said above has already happened.
So to whom we should vote.? Public knows very well.
அப்படியாயின் நீங்களும் சிங்களவர்களுடன் சேர்ந்து முஸ்லிம் மற்றும் தமிழர்களுக்கு எதிராக அணி திரள்கிரீர்களா? உங்களின் போக்கை பார்த்தால் கடைசி நேரத்தில் கட்சி மாறும் நோக்கில் அரசில் இருந்து கொண்டு இருக்கிறீர்கள் போல் தெரிகிறது.
ReplyDeleteஉண்மையான முஸ்லிகளை பொறுத்தவரையில் ஆட்சி மாற்றம் கட்டாயம் தேவை.
Aha.... what an intelligent....innovative thinking !!! an other war awaiting to happen....wow. keep on blabbering Mr Hizb...you are just like some one lost his mind on his death bed(sakrath..). well your political career on a death bed anyway....
ReplyDeletewhen he sleep under the MR's philosophy, everything is ok for him. we need to chase his linage. is there any Anti Muslim (like PBS) in his chain?
ReplyDelete