Header Ads



தேச பாதுகாப்பினை போலவே, மக்களை பாதுகாப்பதிலும் முப்படையினர் அர்ப்பணிப்புடன் இருக்கின்றனர் - ஜனாதிபதி மகிந்த

அசாதாரண காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் அனைத்து விரைவாக வழங்கப்படும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

அனர்த்தங்களில் வீடுகளை இழந்தவர்களுக்கா வீடுகளை அமைத்துக் கொடுக்க முப்படையினரின் உதவியும் பெற்றுக் கொள்ளப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

தேச பாதுகாப்பினை போலவே மக்களை பாதுகாப்பதிலும் முப்படையினர் அர்ப்பணிப்புடன் இருக்கின்றனர்.

அவர்கள் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இதன் போது கூறினார். 

No comments

Powered by Blogger.