Header Ads



சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை, நள்ளிரவு வெளியாகிறது வா்த்தகமானி அறிவித்தல்..?

 (ஹாசிப் யாஸீன்)

சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை வழங்கப்படவுள்ளது. இதுகுறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவுக்கு வெளியிடப்படவுள்ளது. உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சினால் இந்த நகர சபை வழங்கப்படவுள்ளது.

உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் அதாஉல்லாவின் பணிப்புரைக்கமைய உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் ஆலோசகராக அண்மையில் நியமிக்கப்பட்ட கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் முயற்சியினாலேயே சாய்ந்தமருதுக்கான நகர சபை கிடைக்கப் பெற்றவுள்ளது.

கல்முனை மாநகர சபையின் முதல்வராக பதவி வகித்த சிராஸ் மீராசாஹிபை முஸ்லிம் காங்கிரஸ் பலவந்தமாக இராஜினாமா செய்வித்தமையினால் அவர், சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபையைப் பெறுவதற்கு அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்டார். இதன் பின்னர் சாய்ந்தமருது பிரதேச சபைக் கோரிக்கை தற்போது நகர சபையாக மாற்றம் பெற்று வழங்கப்படவுள்ளது

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் இவ்வேளையில் இந்த நகர சபை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. வரலாற்று தவறு ஒன்று அரங்கேற்றப்படுகிறது சக்தி உள்ளவர்கள் முடிந்தால் தடுத்து நிறுத்துங்கள்.

    ReplyDelete
  2. Siras Meerasahib and Atha Ballah are going to make historical mistake in their political life in muslim community. Siras and Atha you are doing real dirty politics. you will do anythings for your own willings. but not for the muslim. fear Allah.

    ReplyDelete
  3. HAI KURUVI AFTER LONG TIME.HOW ARE YOU

    ReplyDelete

Powered by Blogger.