Header Ads



ரிசாத் பதியுதீன் போன்று அவசரப்பட்டு, அள்ளுண்டு போகவேண்டிய அவசியமில்லை - ரவூப் ஹக்கீம்


ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் அவசரப்படாத நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏன் அவசரப்படவேண்டுமென கேள்வி எழுப்பியிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அரசு தரப்பில் சாதகமான சமிக்ஞைகள் காணப்படுவதால் முடிவெடுப்பதை தாமதப்படுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

நேற்று மாலை ரவூப் ஹக்கீம் விடுத்திருக்கும் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இறுதி முடிவை மேற்கொள்வதற்கு இன்னும் சில நாட்கள் தாமதமாகலாம் என்ற நிலையில் பிரதான வேட்பாளர்கள் இருவரினதும் தரப்புகளிலிருந்தும் சாதகமான சமிக்ஞைகள் கிடைத்துள்ளன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய கோரிக்கைகளை அரசாங்கம் இன்னும் சில நாட்களில் நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என நம்பிக்கை தெரிவித்துள்ள கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கத் தரப்பில் பின்னடைவு காணப்படுமானால் எதிரணி வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

புதன்கிழமை முற்பகல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரீ. ஹசனலி உட்பட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலரான பைசல் காசிம் ,எம்.எஸ்.தௌபிக், முத்தலிப் பாவா பாரூக் ஆகியோருடன் இன்னொரு கட்டப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் அவரை சந்திப்பதற்கு முன்னர் பிரஸ்தாப பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்துத் தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், கட்சியின் பெறுமானம் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் இக் கட்டத்தில்  சமூகத்திற்கான அவசியத் தேவைகளைச் சாதித்துக்கொள்வதில்தான் சாணக்கியம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கரையோர மாவட்டம்  தொடர்பில் தயாரிக்கபப்பட்டு பொதுநிர்வாக உள்நாட்டு அமைச்சரால் சமர்ப்பிக்கப்படும் அமைச்சரவைப் பத்திரத்தை மேலும் நியாயப்படுத்தும் வகையில் மகிந்த சிந்தனை 1 (ஒன்று) இல் இடம்பெற்றிருந்த ஓர் அம்சத்தையும் அதில் உள்வாங்கிக்கொள்வது பயனுள்ளதாக அமையும் என்றும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

மன்னார் சிலாபத்துறையில் தனியாருக்குச் சொந்தமான காணியை ஆக்கிரமித்து அமைக்கப்படவுள்ள கடற்படை முகாமை அகற்றிக்கொள்வது பற்றியும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுடன் அதுபற்றி தாம்  கதைப்பதாகவும் அவருடன் முஸ்லிம் காங்கிரஸ் குழுவினரின் சந்திப்பொன்றிற்கு ஏற்பாடு செய்வதாகவும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்னும் பல சமூகம் சார்ந்த விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தேர்தல் சம்பந்தமாக மிகவும் நிதானமாகவும் சாதுரியமாகவும்  நடந்துகொள்ள வேண்டுமென தமது பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் ஹக்கீம் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் போன்று அவசரப்பட்டு அள்ளுண்டு போக வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூட இன்னும் அவசரப்பட்டு தனது முடிவை அறிவிக்காத சூழ்நிலையில் நாம் ஏன் அதற்காக அவசரப்பட வேண்டியுள்ளது. என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தமது பாராளுமன்ற 

14 comments:

  1. irukira pathu kaapu paithudum enru ippadi sollural unga mudiva yaaru paartha makkal eppavo mudivu eduthudanga

    ReplyDelete
  2. 2:10. அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது; அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு.

    ReplyDelete
  3. தலைவரே நீர் எப்போதாவது சிந்தித்த்து உண்டா இந்த அறிக்கை விடுவதட்கு முன்பு, தமிழ் தேசிய கூடமைப்பு சலுஹைகககலுக்காஹா சமூத்தை விட்கமாட்டாற்ாககல் என்று, ஆனால் தலைவரே நீங்கள் என்ன செய்துகொண்டு இப்படியான கருத்துக்களை விடுகிறீர்கள் வெட்கமில்லாய, நீங்கள் இப்போது கேட்பதெல்லாம் முஸ்லிம் சமூகதுத்ீட்கு பல வருடங்களுக்கு முன்பு தருவதாக சொன்னதுதான்

    ReplyDelete
  4. avarhal thirudarhalahavum, moodarhalahavum iruntharhal..........

    ReplyDelete
  5. ஆதரவாளர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் ஆதரவாளர் போன்று சிந்திப்பதும் செயற்படடுவதும் முஸ்லிம் காங்கிரசின் தீவிர ஆதரவாளன் என்ற அடிப்படையில் கவலை தருகின்றது. எத்தனையோ முறை அரசாங்கத்து உள்ளிருந்து தமது எதிர்ப்பினை தலைவர் வெளிக்காட்டி இருக்கிறார், சர்வதேசத்துக்கு பௌத்த கடும்போக்கு வாதம் பற்றி எச்சரிக்கை செய்திருக்கிறார், விமல் வீரவன்ச போன்ர அரச அடிவருடிகள் மீது மிக கடுமையாக பேசியிருக்கிறார். அவர் இன்னும் முடிவை அறிவிக்கவே இல்லையே.. எங்கேயாவது அவர் சொன்னாரா நான் மகிந்தவிற்கு ஆதரவு என்று.. முஸ்லிம்கள் எப்பவோ முடிவெடுத்து விட்டார்கள் என்பது அவருக்கென்ன தெரியாத? இந்த தாமதத்தில் யுக்தி, சாணக்கியம், தந்திரம், அறிவு இல்லாமல் அவர் செயற்படவே மாட்டார் என்ற நம்பிக்கை மக்களிடித்தில் இருக்கவேண்டும். இத்தகைய செயற்பாடுகளில் சாமர்த்தியமாக அவர் முடிவெடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    ReplyDelete
  6. When you started to follow TNA pathway? How can you compare freedom fighters (TNA) with corrupted your party?
    Are you waiting for MR’s promises, definitely no because there is a list of unfulfilled promises. We know that you are bargaining the amount. You asked 600 million from UNP and common candidate, they refuse to pay. Now only source where you can get money is MR, do your business successfully. You indicated this saying that the party's value is increasing?
    You talk about releasing land of Muslim, can’t they take back land after winning the election. We know that you have readymade answer for your mistakes that is government cheated us. How can you negotiate with the government which cheated you several occasions?
    We know that your aim is personal benefits. Will see how long you fake Muslims.

    ReplyDelete
  7. பேச்சுவார்த்தை நடத்துவதற்கே தகுயற்ற ராஜபக்ச அன் கோ களிடம் பேசுவதற்கு என்னகிடக்குகிறது. நீங்கள் முஸ்லிம்களின் பிரச்சினை பற்றி பேசுவதாக தெரியவில்லை. உங்களது தனிப்பட்ட விடயம் பேசுவதாகவே தெரிகிறது. வசீர் செகுதாவுதும், ஹபீஸ் நசீரினதும் விருபத்துக்கு முஸ்லிம்களின் உரிமையை தாரைவாக்க முப்ட வேண்டாம். பாராள மன்ற தேர்தல் வரும் போது இதற்கான பரிசை மக்கள் தருவார்கள் என்பதை தலைவர் அவர்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

    முடிவின் தாமதத்துக்கு அரசியல் தந்திரம் ( பெருபான்மை மக்கள் ராஜபக்ச பக்கம் சாயாமல் இருப்பதற்கு ) என்றால் இப்படியான மடத்தனமான அறிக்கைகள் விடுவதையும், பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதையும் நிறுத்திக் கொள்ளுங்கள்.

    ஆனால் முஸ்லிம்களினதும் காங்கிரசினதும் ( உங்களது தலைமையில் ) நம்பக தன்மை எதிர்காலத்தில் கேள்விக்குரியதாகவே உள்ளது. இப்படி ஒரு போக்கு நமது மார்கத்துக்கும் ஈமானுக்கும் ஒத்துவருமா????????????

    ReplyDelete
  8. yes Rishad is the capable leader, he took the decision correctly in proper time. so whats wrong in his decision now? could you tell us Mr. Hakeem? you are not the capable for leadership. you still looking forward to the single reason to be with the government. the BBS also declared that, they are supporting to Mahinda without any demand. you still saying we can get good works from Mahinda and co. you are one of the useless leader we have ever got.

    ReplyDelete
  9. If your files are with Mahinda, you better stay with him. Maithree will not accommodate those file holders.

    ReplyDelete
  10. Bro. Habeeb Jamaldeen
    I like your wording "You asked 600 million from UNP and common candidate" but if you don't proof it your are a "BULL SHIT"

    ReplyDelete
  11. Late aha vanthalum latest aha varuvar Leader

    ReplyDelete
  12. Habeeb Jamaldeen, please remember every comment will have to be answered in the court of Allah. If you are making false allegations fear Allah. Elections, Mahinda and Maithree will come and go but our community has to remain united. We should not fall apart for narrow political views. It is understandable that a lot of UNP supporters are frustated but please avoid baseless mud slinging.

    ReplyDelete
  13. This talk Shop acting as proxy of Mahinda & Co. I wish Allah will make end of his game and SLMC thieves.

    ReplyDelete
  14. இதைத்தான் இராஜதந்திரம் என்பதோ?

    ReplyDelete

Powered by Blogger.