மஹிந்த ராஜபக்ஸ வழங்கியுள்ள ஒருவார கால அவகாசம், சலூன் கதவினையும் மூட தீர்மானம்
கட்சி தாவுவோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளார். எதிர்வரும் வாரம் வரையில் எதிர்க்கட்சியிலிருந்து ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள அவகாசம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கண்டியில் வைத்து ஜனாதிபதி, முக்கிய அமைச்சர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.ஒரு வார காலத்தின் பின்னர் எந்தவொரு உறுப்பினரும் ஆளும் கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவரும் அடுத்த வாரத்தின் பின்னர் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என தெரிவித்துள்ளார்.கட்சி தாவுவது தொடர்பில் எந்த நேரத்திலும் கவலைப்பட்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் வாரத்தில் தமது சலூன் கதவினை மூட தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.ஆளும் கட்சி கதவு சலூன் கதவைப் போன்றது எனவும் எவரும் உள்ளே வரலாம் எவரும் வெளியே செல்லலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Have you closed your door for SLMC thieves also?
ReplyDelete