சந்திரிக்கா என்பவர், கீழேதள்ளி மிதித்து நிர்வாணப்படுத்தி, வீதியில் ஓடவைக்க வேண்டியவர்” - அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க
“சந்திரிக்கா என்பவர், கீழே தள்ளி மிதித்து நிர்வாணப்படுத்தி, வீதியில் ஓட வைக்க வேண்டியவர்” – மகிந்தவின் உயர் கல்லி அமைச்சர்-
“முன்னாள் ஜனாதிபதிக்கு இப்படி கூறினால் சாதாரண பெண்களின் நிலை எப்படி”
உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க வெளியிட்டுள்ள கருத்தானது நாட்டு பெண்களுக்கு செய்த பாரிய குற்றம் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவரது இந்த கருத்தாது குற்றவியல் சட்டத்தின் கீழ் வரும் இழிவுப்படுத்தும் குற்றம் எனவும் அவர் கூறியுள்ளார்.
சந்திரிக்கா பண்டாரநாயக்க என்பவர் கீழே தள்ளி மிதித்து நிர்வாணப்படுத்தி வீதியில் ஓடவைக்க வேண்டியவர் என எஸ்.பி. திஸாநயக்க கூறியுள்ளதாகவும், நாட்டின் உயர் கல்வி அமைச்சரான அவர் வெளியிட்டுள்ள இந்த கருத்து மிகவும் அருவருப்பானது எனவும் ரோசி சேனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு இப்படி கூறினால், நாட்டில் வாழும் சாதாரண மக்கள் மற்றும் பெண்களின் நிலைமை என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சரது கருத்து மூலம் அவர் குற்றம் செய்திருந்தால், அதற்கு எதிராக சந்திரிக்கா பண்டாரநாயக்கவே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறான நடவடிக்கையை எடுக்குமாறு தான் அவரிடம் கோரவுள்ளதாகவும் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு பின்னர் ஜனவரி 9 ஆம் திகதி புதிய தலைமைத்துவத்தின் கீழ் இப்படி பெண்களை நிந்திக்கும் செயல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரோசி சேனாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

S B Dissanayaka அப்படி கூறி இருப்பாரானால் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவரை ஒரு மனநோய் வைத்தியரிடம் காட்ட வேண்டும்.
ReplyDeleteஒரு பெண்ணென்று மதிக்காத கீழ்த்தரமான இக்கொடுமைவாதிகளின் கூட்டுதான் தற்போதைய அரசாங்கம். இதை என்று பெளத்த மக்கள் முற்று முழுதாக புரிந்துகொள்ளப்போகின்றார்களோ? பெளத்தர்களிடையே குரோத, விரோத, இனவாத எண்ணங்களை மிக ஆழமாக வித்தத்துவைத்துள்ளார்கள், அவர்களுக்கு புரியவைக்கவேண்டியது சிறுபானமையினரது கடமை, பெளத்தர்களுடன் அண்டி நல்ல முறையில் குடும்ப சகிதம் பழகி நம்மைப்பற்றி அவர்கள் முற்று முழுதாக உணர்ந்துகொள்வதுடன் அவர்களது ஏனைய மக்களுக்கும் அவர்களாகவே நம்மைப்பற்றி நல்லதை சொல்வதே பயனுள்ள செயல்.
ReplyDelete