Header Ads



மண்வீட்டில், மின்சாரமின்றி வாழ்ந்துவரும் மாணவி வெளியிட்ட 'இஸ்லாமிய நாகரீகம்'' நூல் (படங்கள்)

(அப்துல்சலாம் யாசீம்  )

கஹடகஸ்திகிலிய - முக்கிரியாவ புஹாரி நபீலா எழுதியநூல் வெளியீட்டு விழா முக்கிரியாவ முஸ்லிம் மகா வித்தியால மண்டபத்தில் இடம் பெற்றது!

மண் வீட்டில், மின்சாரம் இன்றி வாழ்ந்து வரும் இம்மாணவி இஸ்லாமிய நாகரீகம் எனும் நூலை வெளியிட்டது வடமத்திய மாகாணத்திலேயே வெளியிடப்பட்ட முதல் நூல் எனவும் தெரியவருகின்றது.

தனது முயற்சியில் கிராமத்துக்கும் - பாடசாலைக்கும் பெருமையை பாராட்டி கொடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த நூல், அனைத்து உயர் தர மாணவர்களுக்கும் பயன் பெற வேண்டும் எனும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்லாமிய நூலகத்தின் நூலாசிரியர் புஹாரி ஹபீலா தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் வடமத்திய மாகான உதவிக்கல்விப் பணிப்பாளர் சமது மற்றும் ஆசிரியர்களான எஹியா -நஜீம் ஷா மற்றும் ஆசிரியைகள் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர் 




No comments

Powered by Blogger.