Header Ads



ஹிஸ்புல்லாவின் கோட்டையில் றிசாத், ஏறாவூர், கல்குடா, கல்முனை பிரதேசங்களிலும் வரவேற்பு


சமுகத்தின் விடுதலைக்காகவும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அடிமைத்தனத்திலிருந்து சமுகத்தை மீட்டெடுக்கவும் புறப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீனின்; கிழக்கிற்கான  பயணம் இன்று ஆரம்பமாகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசிலிருந்து வெளியேறி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வந்ததன் பிற்பாடு தலைவர் ரிசாத் மேற்கொள்ளும் முதலாவது சமுக விடுதலைக்கான பிரச்சாரப் பயணம் இதுவாகும்.

இன்று (2014-12-25) காலை கொழும்பிலிருந்து புறப்பட்ட தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீன் முதலாவதாக காத்தான்குடிக்கு விஜயம் செய்கின்றார்.

கிழக்கு மாகாண சபையின் அ.இ.ம.கா உறுப்பினரும் பிரதியமைசசர் ஹிஸ்புல்லாஹ்வின் வலது கையுமான சிப்லி பாறுக் தலைமையில் இன்று காத்தான்குடி கூட்டம்  இடம்பெறவுள்ளது.

பிற்பகல் 02 மணிக்கு காத்தான்குடியை சென்றடையும் தலைவர் ரிசாத் பதியுதீன் முதலில் கட்சிப்போராளிகளை சந்தித்து உiராடவுள்ளதுடன் அதனை தொடர்ந்து காத்தான்குடி மக்களை சந்திக்கவுள்ளார்.

இதன்பின்னர் பிற்பகல் 03.30 மணிக்கு ஏறாவூர் நகரைச் சென்றடையும் தலைவர் ரிசாத் பதியுதீனுக்கு அங்கு பெரும் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் அ.இ.ம.கா உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தலைமையில் இவ்வரவேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

ஏறாவூர் நகர மணிக்கூட்டுச் சந்தியிலிருந்து தலைவர் ரிசாத் வரவேற்கப்படவுள்ளார்.

இதன்பின் ஏறாவூரில் உள்ள கட்சிப் போராளிகளையும் பொதுமக்களையும் தலைவர் ரிசாத் பதியுதீன் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற அ.இ.ம.காவின் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியை கல்குடா தொகுதி மக்கள் ஒன்றுபட்டு வரவேற்கும் நிகழ்வில் தலைவர் ரிசாத் பதியுதீன் கலந்துகொள்ளும் பொருட்டு ஓட்டடாவடிக்கு பயணமாகின்றார்.

அதன் பின்னர் அங்கு இடம்பெறும் பொதுக் கூட்டத்திலும் ஊர்வலத்திலும் தலைவர் ரிசாத் பதியுதீன் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

ரிசாத் பதியுதீனின் கிழக்கிற்கான இன்றைய பயணத்தின் இறுதிநிகழ்வாக கல்முனை நோக்கிச் செல்லும் தலைவர் ரிசாத் பதியுதீன் அப்பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களை சந்தித்து உiராயடவுள்ளார்.

மாலை 07 மணிக்கு இடம்பெறவுள்ள இச்சந்திப்புக்கான ஏற்பாடுகளை கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் மேற்கொண்டு வருகின்றார்.

இங்கு தலைவர் ரிசாத் பதியுதீனை பிரமாண்ட முறையில்  வரவேற்க இளைஞர்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய இந்நிகழ்வை அடுத்து கிழக்கில் மேலும் பல பகுதிகளுக்கும் தலைவர் ரிசாத் பதியுதீன் அடுத்தடுத்த தினங்களில் மக்களின் வேண்டுகோளை ஏற்று விஜயம் செய்யவுள்ளார்.

2 comments:

  1. he is really has a gut to be a true leader. SLMC must learn lessons from TNA & ACMC

    ReplyDelete
  2. Replacement for ashraff. We make him strong.

    ReplyDelete

Powered by Blogger.