முஸ்லிம் காங்கிரஸில் அனர்த்தம் நிகழ்துவிடக்கூடாது என பிரார்த்திக்கிறேன் - ஆசாத் சாலி
ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிக்க முன்வந்தாலும், அக்கட்சிக்குள் வெடிப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாத விடயமாகியுள்ளதாக ஆசாத் சாலி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சற்றுமுன்னர் கூறினார்,
இதுதொடர்பில் அவர் கூறியதாவது,
முஸ்லிம்களுக்கு விரோதமான இந்த அரசாங்கத்திற்கு பாடம்புகட்ட முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கு இந்த அரசாங்கம் எதிரானது என்பதால், முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆகிய நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு, இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க முயற்சிக்கிறோம் என்பதை நாம் பகிரங்கப்படுத்தவேண்டும்.
அண்மையில் ரவூப் ஹக்கீமை நாம் சந்தித்தபோதுகூட இதனை வலியுறுத்தினேன்.
எனினும் முஸ்லிம் காங்கிரஸில் நடைபெறும் நிகழ்வுகளை நோக்குகையில், அக்கட்சிக்குள் வெடிப்பு என்பது தவிர்க்கமுடியாததாகிவிட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்தவிற்கு ஆதரவளித்தாலும், இல்லையேல் மைத்திரிக்கு ஆதரவளித்தாலும் அக்கட்சிக்குள் பிளவு ஏற்படத்தான் போகிறது. எனினும் முஸ்லிம் சமூகத்தின் நலன் கருதி சிந்திக்கிறவன் என்றவகையில், முஸ்லிம் காங்கிரஸில் இனிமேலும் எத்தகைய அனர்த்தமும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பது எனது பிரார்த்தனை.
நான் அறிந்தவகையில் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் பல தரப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தைகளை தனித்தனியே ஆரம்பித்துள்ளதாக அறிகிறேன் எனவும் ஆஸாத் சாலி மேலும் குறிப்பிட்டார்.
.jpg)
If Muslim Congress selects a wrong path (against Islamic principles), Ashraf's Dua will be accepted by Almighty.
ReplyDeleteIt's a pain but no way. Let's hope for the best.
ReplyDeleteMARRAM EMMAKKU VARAM THARUM.THIS WAS BY MARHOOM ASRAF.THALMAYUM URUPPINARKHALUM THONTHARAVU THARUM THIS IS BY HAKEEM.V 4 MY3 AND EXPECT THE BRIGHT FUTURE.
ReplyDeletewait and see
ReplyDelete