ஓட்டமாவடியில் நாளை, அமீர் அலிக்கு வரவேற்பு
-எம்.ரீ.எம்.பாரிஸ்-
கடந்த 12.12.2014 வெள்ளிக்கிழமை சபானாயகர் முன்னிலையில் தேசிய பட்டியல் பாராளு மன்ற உறுப்பினராக பதவியேற்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியினை வரவேற்க்கும் நிகழ்வு நாளை (25) வியாழக்கிழமை ஓட்டமாவடியில் கோல காலமாக நடை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
அரசாங்கம் அகில இலங்கை மக்கள் காங்கிரசினை தன் வைத்து கொள்வதற்காக அக்கட்சி அமீர் அலிக்கு தேசிய பட்டியல் பா.உ பதவி வழங்க வேன்டும் என முன்வைத்த கோரிக்கையினை ஏற்று பா.உ பதவியினை வழங்கியது.
தீடிர் திருப்பு முனையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசாங்கத்தினை விட்டு வெளியேறி பொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்தது அரசாங்கத்தின் பா.உ பதவியை அமீர் அலி பெற்றுக்கொண்டு அரசாங்கத்தின் எதிரணியில் இனைத்து கொண்டமைக்கு பல்வேறு விமர்சனங்களையும்,வரவேற்பினையும் பெற்ற நிலையில் நாளை அமீர் அலியின் சொந்த ஊரில் அவரை வரவேற்கும் நிகழ்வு கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் தலைமையில் நடை பெறவுள்ளது.
ஓட்டமாவடி பஸார் பள்ளிவாயலில் இருந்து ஓட்டமாவடி பிரதேச சபை வரை நடை பவனியாக அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கௌ;ளவுள்ளதாகவும் கல்குடா வாழ் அனைத்து பொது மக்களையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டு குழு அழைக்கின்றனர்.

Post a Comment