Header Ads



நரேந்திர மோடியின் தேர்தல் பிரசார பாணியை பின்பற்றுகிறோம் - ராஜித சேனாரத்ன

இலங்கையின் எதிரணி ஜனாதிபதி வேட்பாளரின் பிரசாரப்பணிகள், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரப்பணிகளை பின்பற்றி மேற்கொள்ளப்படுவதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எதிரணி பொதுவேட்பாளரின் பிரசாரங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதிகள் கிடைக்கவில்லை. எனினும் நரேந்திர மோடியின் பிரசாரப்பணிகளை மேற்கொண்ட நிறுவனத்தனரி்ன்  ஆலோசனைகள் தமக்கு கிடைத்ததாக ராஜித குறிப்பிட்டுள்ளார்

தம்மை பொறுத்தவரையில் இந்தியாவும் இலங்கையில் மாற்று அரசாங்கம் ஒன்றை விரும்புவதாக தாம் நம்புவதாகவும் ராஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தாம் மைத்திரிபாலவுக்கு ஆதரவு தெரிவிக்கப்போவதாக தகவல் வெளியானமையை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமது மனைவியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமது எண்ணங்களில் மாற்றத்தை கொண்டு வர முயற்சித்தார் என்றும் ராஜித குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.