Header Ads



மஹிந்தவுக்கு ஆதரவு திரட்ட, ஏறாவூர் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஏறாவூர் பிரதேசத்தில் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

ஏறாவூர் நளீம் ஹாஜியார் அரிசி ஆலையில்      26-12-2014 நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இத் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஏறாவூர் அபிவிருத்திக்குழுவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எம்.எம்.ஜலால்தீன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது 2015 ஜனாதிபதி தேர்தலில்  ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முகவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் விஷேட உரை நிகழ்த்தப்பட்டது.



No comments

Powered by Blogger.