மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாவர், சந்திரிக்கா பிரதமர் ஆவார் - திஸ்ஸ அத்தநாயக்கா
(Gtn)
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாவர் என நாட்டின் புதிய சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க ஆரூடம் கூறியுள்ளார்.
மைத்திரி ஜனாதிபதியாகினால் சந்திரிக்கா பண்டாரநாயக்கவே பிரதமராக தெரிவு செய்யப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிபாலவின் அரசாங்கத்தின் பிரதமராக சந்திரிக்காவை நியமிக்க இரகசிய உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
சந்திரிக்காவிற்கு பிரதமர் பதவியை வழங்கும் இரகசிய நோக்கத்தை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்துக்கள் மூலம் திஸ்ஸ அத்தநாயக்க மறைமுகமாக மைத்திரிபால ஜனாதிபதியாவர் என்பதனை ஒப்புக் கொண்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
இதேவேளை, திஸ்ஸ அத்தநாயக்கவின் கருத்து தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தவறியுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
.jpg)
Post a Comment