Header Ads



மஹிந்தவின் அழைப்பை நிராகரித்த றிசாத் பதியுதீன் , அச்சுறுத்தியும் அடிபணியவில்லை


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவருடன் நெருக்கமான வட்டாரங்களிலிருந்து பல்வேறு நெருக்கடிகளுடன் கூடிய அழைப்புக்கள் வந்தவண்ணமுள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.

அத்துடன் அரசாங்கத் தரப்பிடமிருந்து அமைச்சர் றிசாத்திற்கு நேரடி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், அமைச்சருக்கு நெருக்கமான மிகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சற்றுமுன்னர் அறியக்கிடைத்தது.

குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் காத்தான்குடியில் நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்குமாறு றிசாத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், கொழும்பில் ஹெலிகெப்டரை தயாராக நிறுத்தி வைத்துக்கொண்டு, மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுமாறு கண்டிப்புடன் கூடிய அழைப்பு றிசாத்திற்கு விடுக்கபட்டுள்ளது. 

எனினும் தமது கட்சியின் தீர்மானத்தை மீறியோ அல்லது கட்சியின் அனுமதியின்றியே தாம் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவாக, அவருடன் மேடையேற முடியாது என அமைச்சர் றிசாத்தினால் அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட உயர் தரப்பினரால் சில அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜப்னா முஸ்லிம் முஸ்லிம் இணையத்திற்கு அறியக்கிடைத்தது. இருந்தபோதும் இந்த அச்சுறுத்தலுக்கு அடிபணியாத றிசாத் பதீயுதீன், தமது அமைச்சுப் பதவியை இழக்க தாம் தயாரெனவும் அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த சக்திகளுக்கும் அடிபணிய தாம் தயாரில்லையென உறுதிபட  தெரிவித்துள்ளார்.

இதேவேளை றிசாத் பதியுதீன் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களில் இதுவரை ஈடுபடாத நிலையில், அவரது கட்சியைச் சேர்ந்தவர்களும், அவருக்கு பூரண ஒத்துழைப்பு நல்குவதாக அறியவருகிறது. தமது தலைமையின் கட்டளையை ஏற்று, தமது கட்சியினைச் சேர்ந்த முல்லைத்தீவு பிரதேச சபை தமிழ் உறுப்பினர்களோ அல்லது கிழக்கு மாகாண முஸ்லிம் உறுப்பினர்கள் (ஹிஸ்புல்லர தவிர) வேறு எவரும் காத்தான்குடியில் நேற்று நடைபெற்ற மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவான பிரச்சாரங்களில் பங்கேற்காது தமது கட்சித் தலைமைக்கு பூரண விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியக்கிடைத்தது.

இதேவேளை இதுதொடர்பில் அறிந்துகொள்ள அமைச்சர் றிசாத்துடன் தொடர்புகொள்ள முயன்றபோது அவருடைய தொலைபேசி ஓப் செய்யப்பட்டிருந்தது.

7 comments:

  1. சிறந்த தலைவர்களை அல்லாஹ் என்றும் அனுப்பிக்கொண்டே இருப்பான். அவர்களுக்கும் அபார தைரியமும் வீரமும் உறுதியும் நிலைக்க வேண்டி நாம் அனைவரும் அல்லாஹ்விடம் கை ஏந்துவோமாக

    ReplyDelete
  2. Masha allah
    ya allah ithupontra thalaiwarhalai pathuhappayaha. Ameen

    ReplyDelete
  3. We are appreciating your courage. please come out from Mahinda for supporting My3... we beg you...

    ReplyDelete
  4. I'm happy for This News Follow Up But Later Also Don't Support For mahinda

    ReplyDelete
  5. Sir don't worry your only One good leader to Muslim never forget you good luck

    ReplyDelete

Powered by Blogger.