Header Ads



முஸ்லிம் காங்கிரஸில் முறுகல் நிலை - ஹக்கீமுக்கு நெருக்கடி

முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலில் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளாமல் இழுத்தடித்து வருகின்றமை தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸில் முறுகல் நிலை தோன்றியிருப்பதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியகிடைக்கிறது.

நேற்று வெள்ளிக்கிழமை ரவூப் ஹக்கீமுடைய இல்லத்தில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கூட்டத்தின் போதும் கடும் வாதப் பிரதிவாதங்கள் மேலோங்கியுள்ளன.

முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்ற ஒருமித்த நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளனர்.

இருந்தபோதும் கட்சியின் தலைமை தொடர்ந்தும் இறுதித் தீர்மானத்தை அறிவிப்பதில் தொடர்ந்து தாமதத்தை கடைபிடிப்பதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23 ஆம் திகதி தபால் மூல வாக்களிப்பு நடைபெறுகிறது. இதற்கிடையில் முஸ்லிம் காங்கிரஸ் தனது தீர்மானத்தை அறிவித்தாக வேண்டும். தமது தொகுதி மக்கள் தம்மீது அதிருப்பதிகளை வெளியிடுவதாகவ முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் ரவூப் ஹக்கீமிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை முஸ்லிம் காங்கிரஸின் தாமதம் குறித்து அறிந்துகொள்வதற்காக ரவூப் ஹக்கீமுக்கு ஜப்னா முஸ்லிம் இணையம் 2 தடவை Call எடுத்தது. ஒரு தடவை எமது தொலைப்பேசி அழைப்பு துண்டிப்பு செய்யப்பட்டது. அடுத்த தடவை Call எடுத்தபோது விடை பகரப்படவில்லை.

கட்சியின் செயலாளர் ஹசன் அலியுடன் தொடர்புகொள்ள முயன்றபோது, அவருடைய தொலைபேசி 0ff செய்யப்பட்டிருநதது.

2

ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பிரதான வேட்பாளர்களில் எவருக்கு ஆதரவளிப்பது என்ற தீர்மானத்தை முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் கடந்த காலங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வெளிப்படை பகையாளியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதாகவும், அவ்வாறு இம்முறையும் செயற்பட தமக்கு இஷ்டம் இல்லையெனவும், அரசாங்கத்தை விட்டு வெளியயேறுவதாக இருந்தால், நட்புடனே வெளியேற வேண்டுமெனவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் வலியுறுத்தியுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments

Powered by Blogger.