வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் - முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள்
நாட்டின் பல பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், அதனால் பாதிக்கபட்டுள்ள மக்களுக்கு உதவும்படி முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து அதன் தலைவர் என்.எம்.அமீன் கூறுகையில்,
வெள்ளத்தினால் சகல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தினால் பாதிக்கபட்டாத பிரதேசங்களும் உள்ளன. இந்நிலையில் பாதிக்கபட்டாத பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் பாதிக்கபட்ட பிரதேசங்களுக்கு உதவ உடனடியாக முன்வர வேண்டும். இது சமூகக் கடமையாகும்.
குறிப்பாக பள்ளிவாசல்கள் இந்த திட்டத்திற்கு உதவ முன்வர வேண்டும். இதற்கான ஒத்துழைப்புகளையும், நிபுனத்துவ ஆலோசனைகளையும் வழங்க முஸ்லிம் கவுன்சில் தயாராகவுள்ளது. இதுதொடர்பில் மேலதிக விபரங்களை முஸ்லிம் கவுன்சில் தயாராகவுள்ளது என்றார்.
.jpg)
Post a Comment