Header Ads



முஸ்லிம் வாக்குகளின் துணையுடன், மைத்திரிபால ஜனாதிபதியாவார் - சுஹைர்

(ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்)

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், மஹிந்த ராஜபக்ஸ தோல்வியடைவதுடன், பெருமளவு முஸ்லிம்களின் வாக்குகளின் துணையுடன் மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவாரென ஜனாதிபதி சட்டத்தரணி சுஹைர் தெரிவித்தார்.

ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும்கூறியதாவது,

மஹிந்த ராஜபக்ஸவுக்கு தற்போதைய நிலை மகிழ்ச்சிதரக்கூடியதாக இல்லை. அவர் தோல்வியடைவதற்கான சந்தர்ப்பங்களே காணப்படுகின்றன. பணம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, அரச வளங்கள் வீணடித்துக் கொண்டுமே மஹிந்த ராஜபக்ஸ தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இருந்தபோதும் அவருடைய தோல்வி நிச்சயமாகி, மைத்திரியின் தேர்தல் வெற்றிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதனால் அலரி மாளிகைகூட சோபையிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தம் ஓய்ந்தபின்னர், இந்த அரசாங்கம் மீது முஸ்லிம்கள் வைத்திருந்த நம்பிக்கையும் வீணடிக்கபட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்த பின் தமது வாழ்க்ககையில் மாற்றங்கள் ஏற்படுமென முஸ்லிம்கள் இந்த அரசின் மீது நம்பிக்கை கொண்டனர். ஆனால் திட்டமிட்ட வகையில் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு சிதறடிக்கப்பட்டுள்ளது. 

முஸ்லிம் வியாபார நிறுவனங்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டன. முஸ்லிம் வியாபார நிறுவனங்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே அவை தாக்கப்ட்டன. முஸ்லிம்களுக்கு எதிரான தெளிவான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் இவற்றை நிறுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசு எத்தகைய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள்வில்லை.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையாளர்களை தடுக்காமல் வேடிக்கை பார்த்த அதேவேளை மறுபக்கம் அந்த வன்முறையாளர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி, எத்தகைய தண்டனைகளையும்கூட விதிக்கவில்லை. இதனால் முஸ்லிம்களுக்கு எதிரான குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் மேற்கொண்ட தெளிவான பாரபட்சமான செயற்பாடுகளே, இந்த அரசாங்கத்திற்கு எதிராகவ தற்போது முஸ்லிம்களை திருப்பிவிட்டுள்ளது.

இந்த அரசாங்கத்திற்கு உரியவைகயில், ஜனநாயக முறையில் பாடம்புகட்ட, இந்நாட்டு முஸ்லிம்களுக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இதனை நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் தக்கமுறையில் பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முஸ்லிம்களுக்கு தெளிவான முறையில் அநீதி இழைத்துள்ளார். அவர் நீதியை நிலைநாட்ட தவறியுள்ளார். எனவே இந்த அரசாங்கத்தை கவிழக்க வேண்டிய தேவையுள்ளது. இதனால்தான நாங்களும் மைத்திரியை ஆதரிக்க தீர்மானித்தோம். மைத்திரி எங்களுக்கு என்ன வாக்குறுதிகளை தந்தார் என்பதைவிட, முக்கிய பிரச்சிகைளுக்கு அவர் ஜனாதிபதியானவுடன், தீர்வை காண்பார் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த ஏதோச்சதிகார ஆட்சியில்தான் பொதுபல சேனாவும் ஆடுகிறது. ஆட்டுவிக்கப்படுகிறது. மைத்திரியின் அணியில் ஜாதிக்க ஹெல உறுமய இருந்தபோதும், பொதுபல சேனாக்கும், ஹெல உறுமயவுக்கும் பாரிய வித்தியங்கள் உண்டு.

பொதுபல சேனா ஒர பயங்கரவாத அமைப்பு. சர்வதேச அமைப்புக்கள் சிலவும் பொதுபல சேனாவை பயங்கரவாத அமைப்பென்றுதான் பிரகடனப்படுத்தியுள்ளன.

ஹெல உறுமயவின் அத்துரலிய ரத்தின தேரர், நான் ஈரான் நாட்டு தூதுவராக இருந்தபோது, அங்கு வந்திருந்தார். அவர் இஸ்லாத்தைப் பற்றியும், இலங்கை முஸ்லிம்கள் பற்றியும் பல விடயங்களை கேட்டறிந்துகொண்டார். இதற்கு முன் தான் இதுகுறித்து ஒருபோதும் அறிந்திருக்கவில்லையெனவும் கவலைப்பட்டார். 

அந்தவழியில் மைத்திபால ஜனாதிபதியானாலும், அவருடன் ஹெல உறுமய இருந்தாலும், அவர்களை நல்ல வழிக்கு கொண்டு வரலாமென்ற நம்பிக்கை உண்டு.

மைத்திரிபால ஜனாதிபதியானால் சிங்கள - முஸ்லிம் கலவரம் வெடிக்குமென்று கூறுவது எல்லாம் சுத்த பம்மாத்து, அதற்காக எந்த தேவையும் இல்லை. அதனை மைத்திரிபால சிறிசேனவோ அல்லது அவர் தலைமையிலான அரசாங்கமோ ஆதரிக்கப்போவதும் இல்லை. சட்டததை மீறுகிறவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்ட்டு தண்டிக்கப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுஹைர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் மேலும் தொவித்தார்.

4 comments:

  1. JHU not destroy Mosques and set on fire Muslim business but some of our Muslim politicians use JHU as an excuse to support MR and Co. to protect their own perks and previllage, however Muslims vote banks are for Maithri,no doubt.

    ReplyDelete
  2. Well said Bro. Our Muslim political leaders working for there own perks. Let's hope for the best. My vote for future president Mr. MAITHIRI. Dear brothers and sisters both of them are Singhalies but we know Mahinda is a enemy of Muslims so we support for a change.

    ReplyDelete
  3. Mahinda has ruled two terms that is enough so people looking for a change. It is a well known fact present government is behind BBS so they ignored law and order like Alutgama incident. I think this is the turning point on the side of Muslims so mahinda has missed the opputunity to get the support of Muslims.

    ReplyDelete
  4. There is no rule of law in SL.We need a change in order to
    Bring back the rule of law. This CHANGE can be brought by
    MS! Let MR go home!

    ReplyDelete

Powered by Blogger.