மஹிந்தவுக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு இடமளிக்கமாட்டோம் - அத்துரலிய ரத்தின தேரர்
மைத்திரி ஆட்சியில், எந்தவொரு சர்வதேச தலையீட்டிற்கும் இடம் அளிக்கப் போவதில்லை என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அத்துரலிய ரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
குறிப்பாக இராணுவத்தினர் தொடர்பாக ஆய்வொன்றை மேற்கொள்வதாக தங்கள் மீது குற்றம் சுமத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இராணுவத்தினருக்கோ, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவிற்கோ அல்லது தற்போதைய ஜனாதிபதிக்கோ சர்வதேச ரீதியான விசாரணைகளுக்கு நாங்கள் இடம் அளிக்கப் போவதில்லை என ஹெல உறுமயவின் தலைவர் தெரிவித்தார்.
அதேவேளை, அரசாங்கத்தின் புலனாய்வு பிரிவினரின் ஆய்வுக்கு அமைய பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவிற்கு 53.1 சத வீத வாக்குகள் கிடைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு முன்னர் தெரிவிக்கப்பட்ட 46 சத வீதத்தில் இருந்து 40 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

Post a Comment