மத்தள விமான நிலையம் அமைக்க 27 பில்லியன் கடன், வருமானமோ மாதம் 16000 ரூபா - சம்பிக்க ரணவக்க
ஹம்பாந்தோட்டை மத்தள விமான நிலைய அமைப்புக்காக 27பில்லியன் ரூபாய்கள் கடனாக பெறப்பட்டுள்ளன.
எனினும் அந்த விமான நிலையத்தின் மாத வருமானம் 16,000 ரூபாவாகும்.
இந்தநிலையில் குறித்த 27 பில்லியன் ரூபாய் கடனை செலுத்துவதற்கு 144, 000 வருடங்கள் பிடிக்கும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மனித குலம் பரிணாம வளர்ச்சி ஏற்படு;த்தப்பட்டு 143 வருடங்கள் கடந்துள்ளன
இந்தநிலையில் மத்தள விமான நிலையத்தின் கடன்களை அடைப்பதற்கும் மனித குல பரிணாம வளர்ச்சியின் காலங்களை எதிர்காலத்தில் கடக்க வேண்டியிருக்கும் என்று சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்தளை விமான நிலையம் மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்துக்காக அமைக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றாகும் என்றும் ரணவக்க இன்று காலை பிட்டகோட்டேயில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்தார்.
.jpg)
Post a Comment