Header Ads



இலங்கையில் நம்பகமான முறையில் தேர்தல் நடத்தப்படும் - பான் கீ மூன் நம்புகிறார்

நம்பகமான முறையில் இலங்கையில் தேர்தல் நடத்தப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

இலங்கை அரசாங்கம் நம்பகமானதும் அமைதியானதுமான தேர்தலை நடாத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிசுடன் தொலைபேசியில் தொடர்பு ஏற்படுத்திய பான் கீ மூன், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பூரண ஆதரளிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் அரசியல் ரீதியான தீர்வுத் திட்டம் ஆகியன தொடர்பிலும் உதவிகளை வழங்கத் தயார் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறுபான்மை சமூகங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து தரப்பினரும் அச்சமின்றி வாக்களிப்பில் பங்கேற்று தங்களது விருப்பு வெறுப்புக்களை வெளிப்படுத்த அரசாங்கம் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கெர்டுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

பான் கீ மூனின் கோரிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுவரையில் வெளியிடப்படவில்லை.

No comments

Powered by Blogger.