8 ஆம் திகதி வரை என்னை உயிரோடு வைக்க, பிரார்த்தனை செய்யுங்கள் - றிசாத் பதியுதீன்
தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்திலிருந்து விலகப் போகிறேன் என்பதை அரசாங்கத் தரப்பு அறிந்ததும், தமக்கு நேரடி அச்சுறுத்தல் விடுத்ததாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தனது கவலைகளை பகிர்ந்துகொண்ட றிசாத் பதியுதீன், தான் எதிர்வரும் 8 ஆம் திகதிவரை உயிரோடு இருக்க பிரார்த்திக்குமாறு தெரிவித்தார்.
ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தொலைபேசி மூலமாக கருத்து தெரிவித்த அவர், முஸ்லிம்களுக்கு எதிரான இந்த அரசாங்கத்திலிருந்து, முஸ்லிம் சமூகத்திற்காக வெளியே வந்தேன். இதையிட்டு மகிழ்வடைகிறேன். இருந்தபோதும் இதற்காக நான் அதிக விலைகளை செலுத்த வேண்டியிருக்கும் என்பதையும் உணர்கிறேன்.
எனக்கு எதிரான அத்தனை சூழ்ச்சிகளையும் முறியடிக்க அல்லாஹ் போதுமானவன். அன்றும் புலிகளின் அச்சுறுத்தலை எதிர்கொண்டேன். இன்றும் அரசாங்கத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறேன். ஜனாதிபதி, என்மீது எத்தனை குரோதம் கொண்டுள்ளார் என்பதை அவரின் இன்றைய பகிரங்க உரையின் மூலம் உணரமுடிகிறது.
எனினும் நான் முஸ்லிம் சமூகத்திற்காக மேற்கொண்ட இந்த தீர்மானம், முஸ்லிம்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறைவனின் துணையுடன், முஸ்லிம் சமூகத்தின் ஒத்துழைப:புடன் அத்தனை சூழ்ச்சிகளையும் முறியடிக்கும் ஆற்றலை தரவேண்டுமென அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்.
முஸ்லிம்களுக்கு எதிரான இந்த அரசாங்கத்தை தோல்வியடையச் செய்வதற்கான எனது செயற்பாடுகளும் தொடரும். நிச்சயம் இந்த அரசாங்கம் தோல்வியடையும். முஸ்லிம்களின் ஆதரவுடன் மைத்திரிபால ஜனாதிபதியாவார். அந்த 8 ஆம் திகதி வரும்வரை இந்த அரசாங்கம் என்னை உயிரோடு வைத்திருக்குமா என்பது எனக்குத் தெரியாது. அதுவரை நான் உயிரோடு இருக்க வேண்டுமென்பதற்காக பிரார்த்தனை செய்யுங்கள் எனவும் றிசாத் பதியுதீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் வேண்டிக்கொண்டார்.

அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பானாக; ஆமீன்!
ReplyDeleteவரலாற்றின் பக்கங்களில் உங்கள் வீரமும் தியாகமும் போற்றிப் புகழப்படும் அன்பரே..
உலகமே மெச்சும் அளவு கிடைத்த பிரபலமான மந்திரி பதவியைத் துச்சமென நினைத்துத் தூர வீசிவிட்டு, சமூகத்தின் முற்றத்தில் வந்து நிற்கும் உங்கள் துணிவும் தூய்மையும் நாளைய சமுதாயத்திற்கு நல்லதொரு பாடமாக அமையும் நண்பரே...
தேர்தலின் வெற்றி,தோல்விகளுக்கப்பால் 'என் சமூகமே..!' என்ற ஆவலில்-அடங்காத சகோதரப் பற்றில்-ஆள்,அம்பு,படைகளை வேண்டாமென வெறுத்தொதுக்கி வந்து நிற்கும் வன்னி மண்ணின் சிங்கமே...உங்களை எண்ணி என்னிதயம் இரும்பூதெய்துகிறது...
நீயல்லவா தானைத் தலைவன்..நீயன்றோ முஸ்லிம் சேனையின் முன்னணி மன்னன் என உங்களை வாழ்த்திப் பாடவேண்டும் போல மனது பரபரக்கிறது....
ரிஷாதே...அல்லாஹ்வின் முன்னாலன்றி, வேறெவர் முன்னாலும் குனியாத நமது சமூகத்தின் குலக் கொழுந்தே...
நாங்கள் எவனுக்கும் அடிமையில்லை என்பதை அகிலம் கேட்க அறைந்து சொன்னவனே...
உன்னை வாழ்த்த இப்போதைக்கு என்னிடத்தில் வார்த்தைகள் இல்லையப்பா...
sir... என்று என்னைக் கூப்பிட்ட உங்களுக்கு இப்போது நான் கூறும் இந்த வார்த்தைகள் உரித்தாகட்டும்...
''I SALUTE YOU, SIR.''
-எஸ். ஹமீத்.
You did a big secrifice for our community. We appreciate your great service for the Northern Muslim while facing lot of challenges.
ReplyDeleteThe main thing you set an example in front of SLMC thieves who follow selfish lips service leader.
We pray Allah will protect your safety and security.
அல்லாஹ்வை அன்றி வேறு யாராலும் தம் உயைரை எடுக்க முடியாது.
ReplyDeleteஎனவே, அந்த அல்லாஹ் எதை நாடியுள்ளானோ அதே நேரிடும். மஹிந்தவோ அவனின் கூட்டமோ என்ன செய்ய முடியுமோ செய்து பார்கட்டும். நாம் எல்லாம் உம்முடன் என்றும் இருப்போம்.....அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!!!! வெற்றியளிப்பானாக!!!! உங்களையும் உங்கள் குடும்பத்தையும் என்றென்றும் பாதுகாப்பானாக!!!
If you are right our dhua behind you insah Allah. Allah is enough to protect us.
ReplyDeleteYou are the good backbone leader to lead the Muslim community in Srilanka. Allah will serve you from the perpetrators.
ReplyDeleteMay Allah accept your good deeds, give you strength in all your endeavors and make your life easier and safer till the end. Ameen.
ReplyDelete