முஸ்லிம் காங்கிரஸினை வளைத்துப்போட, அரசாங்கம் இறுதிக்கட்ட முயற்சி - எம்.பி.க்கள் கொதிப்பு
முஸ்லிம் காங்கிரஸினை வளைத்துப்போட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் இறுதிகட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கிடையில் பிளவு நிலையும் தோன்றியுள்ளது..
ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் எந்த வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமென்ற தாமதத்திற்கான காரணமாக ரவூப் ஹக்கீமை அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையில் றிசாத் பதியுதீனும் அரசாங்கத்தை விட்டு வெளியேறிவிட்டமையால், எப்படியாவது முஸ்லிம் காங்கிரஸினை தம்பக்கம் வைத்துக்கொள்ள அரசாங்கம் தீவிர முயற்சி காட்டுகிறது. அதன் ஒரு கட்டமாகவே பசில் ராஜபக்ஸ, ரவூப் ஹக்கமுடைய வீட்டுக்கே வந்து, மஹிந்தவிடம் பேச்சு நடாத்த அழைத்துச்சென்றுள்ளார்.
அதேவேளை முஸ்லிம் சமூகம் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்க வேண்டுமென தீர்மானித்துவிட்டமையால் அதையொட்டியே முஸ்லிம் காங்கிரஸும் தீர்மானம் மேற்கொள்ள வேண்டுமென அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் 2 பேர் மிகவும் திடமாக ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சுட்டிக்காட்டினர்.
இதேநேரம் முஸ்லிம் சமூகத்தின் தீர்மானத்தை புறக்கணித்து, முஸ்லிம் காங்கிரஸ் தலைமை, மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு என்ற தீர்மானத்தை மேற்கொண்டால் தமது கட்சிக்குள் பிளவு என்பது தவிர்க்க முடியாத விடயமாகுமென முஸ்லிம் காங்கிரஸின் எம்.பி.க்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு நேற்று நள்ளிரவு வேதனையுடன் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை (நேற்று) ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் 2 தடவைகள் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தின் போது, சில முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் மிகக்காரசாரமாக ரவூப் ஹக்கீமுடன் தர்க்கித்துள்ளனர்...!
மஹிந்த ராஜபக்ஸவையோ அல்லது அரசாங்கத்தையோ காப்பாற்றபோய் மீண்டும், முஸ்லிம் காங்கிரஸிற்குள் பிளவு ஏற்பட:டுவிடக்கூடதென்பதே முஸ்லிம் சமூகத்தின் விருபப்மாகும்.
.jpg)
என்ன என்றாலும் தலைவரைப்பற்றி பிழையாக மக்கள் நினைக்கும் அளவுக்கு இந்த இணையத்தளத்துக்கு செய்தி கொடுத்த அவசர புத்தி எம்பிக்களை கன்டிக்கிறேன், தலைவர் தெளிவாக இருக்கிறார்,
ReplyDeleteஇறைவன் அவனது மார்கத்தினையும் முஸ்லிம்களையும் பாதுகாப்பான் மனசாட்சி இல்லாதோர் அது பற்றி கதைக்க தகுதி இல்லாதவர்கள் இறைவனின் சாபத்திலிருந்தும் வெறுப்பிலிந்தும் தம்மை இவர்கள் பாதுகாத்துக் கொள்ளட்டும்
ReplyDeleteSome Muslim leaders did nothing to the Muslim Community other than perks and privileges. currently Leaders are in fumble to take the suitable decision how to fill their pocket up.
ReplyDeleteSLMC in a very pathetic situation because they do not have very strong policy. The rule is simple. If they want Gotabaya's Rule of Law in the country, they can go behind Mahinda.
ReplyDelete