Header Ads



கொழும்பில் இன்று மைத்திரிக்கு 7, மஹிந்தவுக்கு 6

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான  மகிந்த மற்றும் மைத்திரி ஆகிய இருவரையும் ஆதரித்து இன்று 24-12-2014 பரப்புரைக் கூட்டங்களை  நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து கோட்டை, தெஹிவளை, ரத்மலானை, கெஸ்பேவ, ஹோமாகமை, கிரிபத்கொடை, கொலன்னாவை ஆகிய 7 பிரதேசங்களில் பரப்புரைக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.

அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவை ஆதரித்து கும்புறுப்பிட்டி, மஹரகமை, ஹோமாகமை. ரத்மலானை, தெஹிவளை, மொரட்டுவை ஆகிய 6 பிரதேசங்களில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.

No comments

Powered by Blogger.