Header Ads



பிக்கு சிறுவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - விஹா­ரா­தி­ப­திக்கு 30 வருட கடூழிய சிறைத்­தண்­டனை

ஒரு மாத காலம் வரையில் பிக்­கு சிறுவனை பாலியல் ரீதி­யி­லான துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தி­ய­தாக மொன­ரா­கலைப் பிர­தேச விகாரை ஒன்றின் விஹா­ரா­தி­ப­தி ஒருவர் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டு நிரூ­ப­ண­மா­னதால் அவ­ருக்கு மொன­ரா­கலை நீதிவான் நீதி­மன்றம் 30 வருட கால கடூ­ழிய சிறைத்­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

அத்­துடன் 75 ஆயிரம் ரூபா அப­ராதம் விதித்த நீதி­மன்றம் மேலும் 75 ஆயிரம் ரூபாவை பாதிக்­கப்­பட்ட பிக்கு சிறு­வ­னுக்கு இழப்­பீ­டாக வழங்­கு­மாறும் உத்­த­ர­விட்­டுள்­ளது. கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி முதல் மே மாதம் 13 ஆம் திகதி வரை­யான ஒரு மாத கால­மாக மேற்­படி பிக்­கு சிறு­வனை மொன­ரா­கலை விஹா­ரை­யொன்றைச் சேர்ந்த விஹா­ரா­தி­பதி பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்தி வந்­துள்ளார். மேற்­படி குற்­றச்­செயல் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட விஹா­ரா­தி­பதி பிணையில் விடு­விக்­கப்­பட்ட போதும் மீண்டும் விசா­ர­ணை­களின் போது அவர் நீதி­மன்றம் ஆஜ­ரா­வதை தவிர்த்து வந்­துள்ளார். இத­னை­ய­டுத்து மேற்­படி விஹா­ரா­தி­ப­திக்கு எதி­ராக பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட விஹா­ரா­தி­பதி பிக்கு சிறு­வன் தொடர்­பான வைத்­திய அறிக்கையின் பிரகாரம் குற்றவாளியாக அறியப்பட்டார். இதன் பின்னரே மேற்படி தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.