Header Ads



ஹாலிஎல மண்சரிவில் 5 வீடுகள் புதையுண்டன, 11 பேர் மாயம், இருவரது சடலங்கள் மீட்பு

ஹாலிஎல, வேவல்ஹின்ன, மெதகம பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில், 5 வீடுகள் புதையுண்டுள்ளதாகவும் அவ்வீடுகளில் இருந்த 11பேர் தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இராணுவம், பொலிஸார் மற்றும் மீட்புப் பணியாளர்கள் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எவ்வாறெனினும், குறித்த பகுதியில் தொடர்ந்து மண்சரிவு ஏற்படுவதால் மீட்புப் பணிகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். மண்ணில் புதையுண்ணவர்களில் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர். 

No comments

Powered by Blogger.