கல்முனை 4 கூறாகிறது - முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை என்கிறார் சிறாஸ்
சாய்தமருதுவுக்கு தனியான பிரதேச சபை வேண்டுமென்பது அப்பிரதேச மக்களின் 25 வருட கால கனவாகும் என முன்னாள் கல்முனை மேயர் சிறாஸ் மீறாசாஹிப் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
சாய்தமருது தனி பிரதேச சபையாக 24 ஆம் திகதி வியரழக்கிழமை பிரகடனப்படுத்தப்பட மாட்டாது. உரியவேளையில் அமைச்சர் அதாவுல்லாஹ் அதற்கான அறிவிப்பை வெளியிடுவார். கல்முனை மேயர் பதவியை தூக்கிவிசிவிட்டும், முஸ்லிம் காங்கிரஸினை விலகியும் நான் சென்றமைக்கு பிரதான காரணம் பிரதேச மக்களின் கனவினை நனவாக்கத்தான். அது விரைவில் நடைபெறும் என்பதையிட்டு சந்தோசமடைகிறேன்.
இதன்மூலம் கல்முனை தொகுதி மேலும் அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்கிறது. இதனால் கல்முனை முஸ்லிம்கள் எந்த பாதிப்பையும் எதிர்கொள்ளப்போவதில்லை. அவர்களுக்கு பாதிப்பு வராது. ஆனால் சில அரசியல்வாதிகளின் எதிர்காலம் சூனியமாக்கப்படும். அப்படிப்பட்ட அரசியல்வாதிகள்தான் சாய்ந்தமருது தனி பிரதேச சபையாக உதயமாகுவதை எதிர்க்கிறார்கள்.
அதேவேளை கல்முனை 4 பிரிவுகளாக பிரிக்கப்படவுள்ளது, கல்முனை மாநகர சபை, சாய்ந்தமருது நகரசபை, கல்முனை தமிழ் பிரதேச சபை மற்றும் மருதமுனை பிரதேச சபை என்பனவையாகும் எனவும் சிறாஸ் மீறாசாஹிப் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.
.jpg)
கல்முனை மாநகரம் என்பது கிழக்கு மாகான முஸ்லிம்களின் முக வெற்றிலையாகும். இந்த மாநகர பிரதேசங்கள் பிரிக்கப்படாமல் ஒற்றுமையாக இருப்பது தான் இப்பிரதேச முஸ்லிம்களுக்கு பலமும் பாதுகாப்புமாகும்.. ஏன் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கே பலமும் பாதுகாப்புமாகும்.
ReplyDelete