Header Ads



பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கினால், சோபித தேரருக்கு ஆதரவளிக்கத் தயார் - SLMC

பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கினால் மாதுலுவே சோபித தேரருக்கு ஆதரவளிக்கத் தயார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சோபித தேரர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கினால் எமது மக்கள் சந்தேகமின்றி ஆதரவளிப்பார்கள்.

குறிப்பாக சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முன்வந்தால் ஆதரவளிப்பது குறித்து கவனம் செலுத்த முடியும். சோபித தேரர் என்று விசேடமில்லை.

பௌத்த பிக்கு ஒருவர் ஜனாதிபதியாக தெரிவாவதில் எமக்கு எவ்வித பிரச்சினைகளும் கிடையாது.

மௌலவி குருக்கள் அல்லது பௌத்த பிக்கு என்ற காரணத்தினால் முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிராகரிக்க மாட்டார்கள்.

எனினும் நாட்டில் தமிழர் ஒருவரோ அல்லது முஸ்லிம் ஒருவரோ ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது. இது எழுதப்படாத விதியாகும்.

எனவே, சிறுபான்மை மக்கள் எந்தநாளும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒர் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகின்றது.

நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக உரிய முறையில் ஆட்சி செய்யக் கூடிய ஒருவரை முஸ்லிம் மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்வார்கள் என ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.