Header Ads



ஆட்சியை தோற்கடிக்கும் பொருத்தமான ஒருவரை பொது வேட்பாளராக தெரிவுசெய்ய முடிந்துள்ளது

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தூய்மைக்கான நாளை தேசிய சபை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று 22-11-2014 இன்று நடைபெறுவதாக அந்த சபையின் தலைவர் அதுரலியே ரத்தன தேரர் குறிப்பிடுகின்றார்.

ஆயினும் கொள்கை ரீதியாக வகிக்கின்ற நிலைப்பாடுகள் மற்றும் இலக்குகள் குறித்து கலந்துரையாடப்பட வேண்டி உள்ளதாகவும், அதன் பின்னரே பொது வேட்பாளருக்கான முழுமையான ஆதரவை வெளியிட உள்ளதாகவும் தேரர் தெரிவித்துள்ளார்;.

எவ்வாறாயினும், பொது வேட்பாளர் ஒருவரை தெரிவுசெய்ய வேண்டிய நோக்கம் தூய்மைக்கான நாளை தேசிய சபைக்கு இருந்ததாகவும், இந்த ஆட்சியை தோற்கடிக்கக்கூடிய அதன் பிரகாரம் மிகவும் பொருத்தமான  ஒருவரை தெரிவுசெய்ய முடிந்துள்ளதாகவும் ரத்தன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் தீர்மானம் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் எனவும் அதுரலியே ரத்தன தேரர் தெரிவிக்கின்றார்.

No comments

Powered by Blogger.