ஜனாதிபதிக்கு கொடுத்த உறுதிமொழியை காக்க திண்டாடும் முஸ்லிம் காங்கிரஸ்..!
(நஜீப் பின் கபூர்)
பயமுறுத்தலுக்கு அடிபணிந்தோம் 18 திருத்தத்திற்கு
கை தூக்கினோம் முஸ்லிம் காங்கிரஸ்-ஹசன் அலி!
ஜனாதிபதிக்குக் கொடுத்த உறுதி மொழியை காக்க
திண்டாடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை!
ஜனாதிபதி எவ்வளவு நல்லவர் இதனை எம்மால்
முன்பே புரிந்து கொள்ள முடியாமல் போய் விட்டதே!
சில தினங்களுக்கு முன் ஒரு அலுவலுக்காக தலைநகர் சென்றிருந்தேன். அப்போது முன்பு அறிமுகமான ஒரு என்னை அடையாளப்படுத்திக் கொண்டார். உங்களுடன் கொஞ்சம் பேச வேண்டும் என்றார். என்ன விடயம் என்றேன். இல்லை மனம் விடுப்பேச வேண்டும் என்று கூறிய நண்பர் சற்றுத் தூரத்தில் இருந்த ரெஸ்டோரியண்டுக்கு என்னை அழைத்துச் சென்றார்.
நீங்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திலும் எழுதுகின்ற கட்டுரைகளை செய்திகளை விரும்பிப் படிப்பதாகவும், அந்தச் செய்திகள் மு.கா. பிரதேச மட்டத்திலும் அரசியல் உயர் பீடத்திலும் அவ்வப்போது சர்ச்சைகளைத் தோற்றுவிப்பதாகவும் குறிப்பிட்டு, ஏன் இப்படி மு.கா.வை விமர்சிக்கின்றீர்கள்? மக்கள் மத்தியில் கட்சிக்கு இதானால் நெருக்கடிகள் தோன்றுகின்றது என்று என்னிடத்தில் கேள்விகளை எழுப்பினார்.
அப்படி என்னதான் மு.கா.மீது உங்களுக்கு இந்தளவுக்கு கோபம் நீங்கள் எல்லோரும் அஷ்ஃரபுடன் நெருக்கமாக இருந்தவர்கள்தானே என்ன நடந்தது உங்களுக்கு என்று அவர் என்னிடத்தில் கேள்வி எழுப்பினார்.
மனிதன் நல்லவர் அரசியலைப் பற்றி அவருக்கு பெரிதாக ஏதும் தெரியாவிட்டாலும் கட்சி, கொள்கை, சமூகம் என்பவற்றை விட அவருக்கு தற்போதய தலைவரின் பக்தர் என்பது மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும்.
இதனால் அவருக்கு ஆழமாக விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற தேவை எனகில்லை என்பதால் மு.கா.வை நான் விமர்சிக்க வில்லை அதன் தற்போதய நடவடிக்கைகள் தொடர்பாக எனக்கு உடன்பாடு கிடையாது என்றதுடன், நீங்கள் இப்போது என்னை ஒரு ஊடகக் காரணமாக மட்டுமே பாருங்கள். நான் ராஜபக்ஷவையும் ரணிலையும் இதiனை விட மோசமாக விமர்சிப்பதையும் நீங்கள் படிப்பதில்லையா என்று நான் கேட்ட கேள்விக்கு அது சரிதான் இது சமூகப் பிரச்சனை என்றார் அவர். நானும் அதனால்தான் இது விடயத்தில் எனது பணியைச் செய்கின்றேன் என்றேன். நண்பருக்கு புரிந்ததோ இல்லையோ என்று எனக்குத் தெரியாது. இருவரும் வெளியே வந்தோம்.
ஜனாதிபதிக்கு மு.கா.ஆதரவு என்று முன்பு வெளியிட்ட செய்தி தொடர்பாக எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றங்களும் கிடையாது. அது தனி நபர் வக்குறுதிதான் என்றாலும் அது ஆணிவேர் கொடுத்த உறுதி என்பதால்தான் பிரச்சனை. இப்போது ஜனாதிபதித் தேர்தல் விடயத்தில் மு.கா.வில் கருத்து முறன்பாடுகள் உக்கிரமடைந்திருக்கின்றது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகின்றது.
தற்போது நாட்டில் தோன்றி இருக்கின்ற அரசியல் மாற்றம், மு.கா. தலைமை பெரியவருக்கு தனிப்பட்ட ரீதியில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நெருக்கடி நிலை, வாக்குறுதியை மறந்து புதுக் கதை பேசுமளவுக்கு நிலமை இன்று மாறி இருக்கின்றது என்று மட்டும் நன்றாகத் தெரிகின்றது.
ஆளும் தரப்பில் போய் அமைர்ந்து சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருந்த நாட்களில் மு.கா. தலைமை ஷா இந்த ஜனாதிபதி எவ்வளவு நல்லவர் இதனை எம்மால் முன்பே புரிந்து கொள்ள முடியாமல் போய் விட்டதே! என்று அங்கலாயித்து மு.கா. தலைமை பேசிய வார்த்தைகளையும் சமூகத்தில் ஒரு சிலராவது இப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள் என்று நாம் நம்புகின்றோம்.
இது போன்று மு.கா. அவ்வப்போது சுகபோகங்களை அனுபவிப்பதற்காக சுமூகத்துக்குச் சொன்ன கதைகளை எவராவது ஒரு நாவலாக தொகுத்தெடுப்பார்களாக இருந்தால் அது சமூகத்திற்குச் செய்கின்ற பாரிய பணியாக இருக்கும்.
18 திருத்தம் தொடர்பான ஒரு கதை அது பற்றி இப்போது பார்ப்போம்.
கதை சொல்வது நமது தலைகள்
கதை கேட்டுக் கொண்டிருப்பது
கேடு கெட்ட நமது சமூகம்
முஸ்லிம்களே இந்தக் கதையையும்
ஒரு முறை படித்துப் பாருங்கள்
அப்போது நமது சமூகத்தின்
எதிர் காலம் எப்படி அமையப்போகின்றது
என்பது உங்களுக்குப் புரியும்.!
தற்போது ஜனாதிபதிக்கு எல்லை மீறிய அதிகாரங்களை உபயோகிக்க 18 திருத்த மூலம் காரணமாக இருந்து வருகின்றது என்பது அனைவரும் அறிந்த விடயமே. இந்த 18 திருத்த மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் பலர் தற்போது சமூகத்தின் முன் வந்து அதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த 18 விடயத்தில் நேரத்திற்கும் இடத்திற்கும் ஒரு கதையை தேவைக்கு ஏற்றவாறு பேசி வருவதும் அனைவரும் அறிந்த விடயம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒரு காரியத்தை சாதித்துக் கொள்ள அல்லது அவரது நல்லபிப்பிராயத்தைப் பெற்றுக் கொள்ள 18திருத்த மூலத்திற்கு நாம் ஆதரவாக வாக்களித்திருக்கின்றோம் என்று நினைவுபடுத்துவார்கள்.
18க்கு கைதூக்கியது ஒரு சாதனைபோல் கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். மூன்றாவது முறையாகவும் இதன் மூலம் ஜனாதிபதிக்கு தேர்தலில் நிற்க சந்தர்ப்பம் கொடுத்தது நாங்கள் என்று சில தினங்களுக்கு முன்னர் மு.கா.தலைவர் பேசி இருந்தார். எனவே இவர்கள் பூரண விருப்பத்துடனே 18 திருத்தத்தை ஆதரித்தார்கள் என்பதுதான் அதன் அர்த்தம்.
ஆனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏன் இந்த 18வது திருத்த மூலத்திற்கு வாக்களித்தது என்று தற்போது ஒரு புதுக் கதையை சந்தைப்படுத்தி இருக்கின்றார். மு.கா. செயலாளர் ஹசன் அலி. அவர் தனது வாக்கு மூலத்தில் என்ன சொல்லி இருக்கின்றார் என்று இப்போது பார்ப்போம்.
அந்த நிகழ்வு நடந்து முறை மிகவும் அசிங்கமானது அநாகரிகமானது. எங்களுடைய உயிர்களுக்கு ஆபத்து இருக்கின்றது எனவே நீங்கள் 18க்கு ஆதரவு தர வேண்டும் என்று சொல்லப்பட்டது. அந்த நிலையில்தான் இது நடந்தது.
இந்தத் தவறுக்காக மன்னிப்புக் கோருகின்றோம் என்பது ஹசனாரின் புதுக் கதை!
எமது இந்தச் செய்தி வந்து மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டால் அதற்கு வேறு அறிக்கைகளும் வார இடமிருக்கின்றது. நாம் இங்கு முன்வைக்கின்ற ஹசன் அலி பற்றிய குறிப்பு ஆதாரபூர்வமானது. என்பதனையும் பொறுப்புடன் கூறிக் கொள்கின்றோம்.
தமக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாகவே நாம் இந்த 18ம் திருத்தத்திற்கு எமது கரங்களைப் பாராளுமன்றத்தில் உயர்த்தினோம் என்று கூறுகின்றார் இப்போது. அப்படியானால் உங்களை அச்சுறுத்தியவர்கள் யார் என்று கூற முடியுமா என்று கோட்டல் அவர்களின் பெயர்களை சொல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே அச்சுறுத்தல்களுக்கு பயந்து இவர்கள் இதன் பின்னரும் காரியம் பார்க்க நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றது என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது. எனவே தாம் கோரி நிற்கின்ற கரையோர நிருவாக அலகின் காதையும் இதுதான் என்பதை முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ள முடியும்.
தனக்கு ஒரு கனதியான அமைச்சு வேண்டும் ஐயா...!
இருவரைச் சமாளிக்க துணை 2ம் கூடவே தேவை ஐயா...!
சகோ.வுக்கு தூது பதவியும் தந்துட்டால் போதும் ஐயா...!
சமூகப் பிரச்னை தனி அலகு என்று அவ்வப்போது ஐயா...!
நாம் ஏதாவது வாய்தவறி விட்டால் அததைப்போய் ஐயா...!
பெரிது படுத்திக் கொள்ள வேண்டாம் ஐயா...!
அரசியல:;-நாங்கள் சொல்ல குடிகள் கேட்பதுதான் ஐயா...!
தற்போது தமது கொள்கைக்கு - வேலைத் திட்டத்திற்கு அடிபணிய முடியாவிட்டால் இந்த ஜனாதிபதியைத் தூக்கி எறிந்து போடுவோம் என்று ஹெல உறுமய தனது நிலைப்பாட்டில் இன்று வரை இருந்த வருவதுடன் நாம் எடுத்த இந்த முடிவினால் நாம் சிறைக்குள்ளும் தள்ளப்படலாம். அத்துடன் எமது உயிர்கள் கூட இது விடயத்தில் நாம் இழக்கலாம் என்றாலும் சமூகத்தினதும் நாட்டினதும் நலன் கருதியே இந்த முடிவை துணிந்து எடுத்திருக்கின்றோம் என்று அதுருலியே, சம்பிக்க போன்றவர்கள் பேசி இருப்பதனையும் முஸ்லிம் சமூகமும் மு.கா தலைவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.
எல்லாச் சலுகைகளையும் அனுபவித்துவிட்டு இறுதி நேரத்தில் சந்திரிக்காவும், ரணிலும், ராஜபக்ஷவும் நாம் கேட்டதைத் தருவதாக சொன்னார்கள் ஆனால் அவர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்று இறுதி நேரத்தில் பேசி மீண்டும் வாக்குப் பிச்சைகாக இவர்கள் வரும் போது சமூகம் எப்படிப் அவர்களைப் பார்க்கப் போகின்றது என்பதை வைத்து முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சிந்தனையையும் எதிர் காலத்தையும் புரிந்து கொள்ள முடியும்.
எனவே காரியம் சாதிக்கத் தெரியாது அதற்கு சந்தர்ப்பத்துகு ஒரு காரணம் கற்பிக்கின்ற இப்படியான தலைவர்களைத் தொடர்ந்தும் பாராளுமன்றம் அனுப்பி அதன் மூலம் சமூகம் எதனை இவர்களிடத்தில் எதிர்பார்க்க முடியும். எனவே தொடர்ந்து விமர்சனங்கள் செய்வதை விட மு.கா.அரசியல் போக்கில் பாரிய மாற்றங்களுக்கான வேலைத் திட்டங்களையும் அழுத்தங்களையும் சமூகம் முன்னெடுக்க வேண்டி இருக்கின்றது. இது காலத்தின் தேவை. சமூகத்தின் பொறுப்பு.
அந்த வேலைத் திட்டம் என்ன?
சற்றுப் பொருத்திருங்கள்.

This comment has been removed by the author.
ReplyDelete