நாட்டு மக்களையே நான் நம்புகிறேன் - அரசியல் பரபரப்புக்களிடையே மஹிந்த ராஜபக்ஸ தெரிவிப்பு
28 தேர்தல்களில் வெற்றி பெற்ற இன்றைய அரசாங்கம் 29 வது தேர்தலிலும் வெற்றி பெறும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொரளை கம்பல் மைதானத்தில் இன்று 21-11-2014 நடைபெற்ற திவிநெகும திட்டத்தின் முதலாவது தேசிய மாநாட்டில பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் நாட்டு மக்களை நம்புகிறேன். நாட்டை நேசிக்கும் மக்கள் இருக்கும் வரை தற்போதைய அரசாங்கத்தின் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை மறுபுறம் திருப்ப எவருக்கும் முடியாது.
ஏழைகள் ஏழைகளாக இருக்க வேண்டும் என்பது எமது தேவையல்ல. மக்களின் தேவைகளுக்கு அமைய இவை கட்டியெழுப்படுகின்றன.
மக்களின் விருப்பு வெறுப்புகளை புறந்தள்ளி விட்ட கிராமத்தை கட்டியெழுப்ப முடியாது. மக்களை கட்டியெழுப்ப முடியாது.
மக்கள் கோரிய அனைத்தையும் இன்றைய அரசாங்கம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தது. மக்களின் உரிமைகளை இல்லாமல் செய்யாது அரசாங்கத்தின் பொறுப்பு நிறைவேற்றப்பட்டு வருகிறது எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வரும்போது நீர் நாட்டு மக்களை நம்பியே ஆகவேண்டும். ஏற்கனவே இரண்டு தேர்தலிலும் மக்கள் உம்மை நம்பியதற்கு நீர் செய்த உபகாரங்கள் மறக்க முடியுமா? இதில் இந்த முறை கடைசிமுறை பார்ப்பதற்கு உள்ளீர் அதைவேற சொல்லவேண்டுமா? படு கொடூரமாக இருக்கும். யார்தான் என்னதான் சொன்னாலும் உமது ஆட்சியில் மக்கள் மிகவும் கேவலப்படுகின்றார்கள், படு பாதகமானதொரு அச்சுறுத்தலானதொரு நிலையையே சந்திக்கவேண்டியுள்ளது. இந்த முறை உமக்கு வாக்குகள் பெளத்தர்களிடமிருந்தே கிடைக்காது என நம்புகின்றோம். அப்படி கிடைத்தால் அது கிணற்றுத்தவளைகளின் வாக்குகளாத்தான் இருக்கும்.
ReplyDeleteYOU 70TH BIRTHDAY CENTRAL GEIL
ReplyDelete