Header Ads



இந்த முஸ்லிம் அமைச்சர் யார்...?

(மூத்த ஊடகவியலாளர் Mohamed Naushad)

Daily Mirror ஆங்கில பத்திரிகை அண்மைக் காலங்களில் ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் Political Gossip (அரசியல் அரட்டை) எனும் தலைப்பில் சிறு சிறு துணுக்குகளாக பல தகவல்ளை பட்டும் படாமலும் பிரசுரித்து வருகின்றது. மிகவும் சுவாரஸ்யமான இந்தப் பகுதியை நான் தொடர்ந்து வாசிப்பதுண்டு. அதில் 12-11-2014 ஒரு விடயத்தை மொழிபெயர்த்து தருகிறேன். இது எனது கருத்தல்ல.

தனது மக்களின் கர்ண கடூரமான எதிர்ப்பை அலட்சியம் செய்ய மேலும் பல சலுகைகள்

கிழக்கு மாகாணத்தில் சிறுபான்மை மக்களின் கணிசமான செல்வாக்கை பெற்றுள்ள ஒரு கட்சித் தலைவரான அமைச்சர் ஆளும் தரப்பினருடன் காரசாரமான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். அப்போது அமைச்சர் “அடுத்த தேர்தலில் பெரும் தலைவரை ஆதரிக்க நான் தயார். ஆனால் எனது மக்களும் வாக்காளர்களும் நாம் அரசில் இருந்து வெளியேற வேண்டும் என வற்புறுத்துகின்றனர்” என்றார்.

அரச தரப்பு நேரடியாக விடயத்துக்கு வர எண்ணியது. அமைச்சரிடம் அவர்கள் நேரடியாகக் கேட்டார்கள் "வெளிப்படையாக சொல்லுங்கள் நீங்கள் உங்கள் மக்களின் அழுத்தங்களுக்கு அப்பாற்பட்டு எங்களுடன் தொடர்ந்து இருக்க நாங்கள் இன்னும் உங்களுக்கு என்ன தரவேண்டும்?”

அரச தரப்பின் இந்த உற்சாகம் ஊட்டும் பதிலைக் கேட்டு அமைச்சரும் நேரடியாகவே விடயத்துக்கு வந்தார். “மேலும் இரண்டு பிரதி அமைச்சர் பதவிகள். என்னுடைய சகோதரருக்கு தூதுவர் பதவி. எனக்கு இதை விட முக்கியமாதோர் அமைச்சர் பதவி. இவை எல்லாம் கிடைத்தால் எனது பாராளுமன்ற உறுப்பினர்கள் மகிழ்ச்சி அடைவர். அத்தோடு கிழக்கு மாகாண சபை தொடர்பாக ஏற்கனவே இணங்கிய பல விடயங்களும் உள்ளன....” என்றார்.

பெரும் தலைவரோடு பேசிவிட்டு மீண்டும் சந்திப்போம் என ஆளும் தரப்பு உறுதி அளித்தது. ஆனால் அமைச்சருக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
இந்த செய்தியின் கீழ் பார்த்வுடனயே ஒரு அமைச்சரை நினைவுக்கு வரும் வகையில் ஒரு கேலிச் சித்திரமும் தரப்பட்டுள்ளது.

5 comments:

  1. இதனால்தான் சொல்வது முஸ்லிம்காங்கிரஸை எதிர்வரும் தேர்தல்களில் புறக்கணித்து புறந்தள்ளிவிடுங்கள். என்ன நடக்கின்றதென்று பார்க்கலாம். முஸ்லிம் காங்கிரஸால் முஸ்லிம்களுக்கு கிடைக்கவிருக்கும் நன்மைகள் இனிமேலும் தேவையில்லை. ஏனென்றால் கடந்த காலங்களில் அவர்களின் உதவியுடன்தான் முஸ்லிம்கள் இலங்கையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். திருட்டுக்கூட்டத்திற்கு பெயர் முஸ்லிம்காங்கிரஸ்.

    ReplyDelete
  2. i think so that man can be our hon.min RAUFF HAKEEM and he is only man DON'T CONSIDER our peoples ,,,,,,,,,,, but the thing is our peoples NOT UNDERSTAND yet........

    ReplyDelete
  3. brother mouna rena muslim congress meethu thaan palar kurai koorugirathu velayaaga irukku.oru visayatthai muthalil vilangi kollungal kaaikira marathukku than kal erivaargal thayavu seythu ippadiyaana karuthu kooruvathai nippaattungal heithavan irukka ambai novathu yen?

    ReplyDelete
  4. Jafeer Cader! You are talking like you just wake up. SLMC doesn't do anything to Muslim Society. As usual Muslim Congress looted Muslim Votes and sell to Governments. Addition to that SLMC doesn't have any principals. Look how they behave in voting for CASINO. Indirectly supported to GOVENMENT. In other hand leaders of SLMC are selfish and everyone's familes well settle down in abroad and they are trying to sacrifice innocent Muslims. Jafeer Cadar grow up and see what's going on around you.

    ReplyDelete
  5. ennamum ungalukku muslim congrees s in PITHALATTANGAL vilanguthilla jafeer cader

    ReplyDelete

Powered by Blogger.