மொரிடானிய ஜனாதிபதி அப்துல் அசீஸுடன் ஜனாதிபதி மஹிந்த சந்திப்பு, ஒப்பந்தங்களும் கைச்சாத்து
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மொரிடானிய ஜனாதிபதி மொஹம்மத் அவுல்ட் அப்துல் அசீஸ் இன்று 13-11-2014 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பின் பின்னர் இரு நாட்டின் தலைவர்கள் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கைச்சத்திடப்பட்டன.
இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், மொரிடானிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சிதி தக் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
மொரிடானிய ஜனாதிபதி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment