மஹிந்த ராஜபக்ஸ இப்படியும் சொன்னார் - மைத்திரிபால சிறிசேன
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எந்த நிகழ்வு நடைபெறும் போதும் எஸ்.டபில்யூ.ஆர். டி. பண்டாரநாயக்க மற்றும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆகியோரை நினைவு கூருவதை நிறுத்துமாறு மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டதாக பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இந்த உத்தரவு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரான தமக்கு விடுக்கப்பட்டதாக மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தொலைக்காட்சி ஒன்றில் 22-11-12014 ஒளிபரப்பான அரசியல் நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் பொதுவேட்பாளர் நிலைக்கு பின்னால் சர்வதேச சக்திகள் உள்ளதாக இன்று காலை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சுமத்திய குற்றச்சாட்டை மறுத்த மைத்திரிபால சிறிசேன இது பொதுமக்களை வேறு திசைக்கு இட்டுச்செல்லும் நடவடிக்கை என்று அவர் தெரிவித்தார்.
இன்று காலை செய்தியாளர் சந்திப்பின் போது தம்மீது குற்றம் சுமத்திய அமைச்சர்களான அநுர பிரியதர்சன யாப்பா, நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த மற்றும் டளஸ் அழகப்பெரும ஆகியோர் ஏற்கனவே மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி தொடர்பில் தம்மிடம் அதிருப்தியை வெளியிட்டவர்கள் என்றும் மைத்திரிபால சிறிசேன கூறினார்
.jpg)
அவங்க எப்படிப்பட்டவங்க என்பதைத்தானே ஆட்சியின் மூலம் மக்களுக்கு நிரூபித்துக்காட்டிவிட்டார்கள். பயங்கரவாதம் ப்யங்கரவாதிகள்தான் தற்போது நாட்டை ஆளுகின்றார்கள். இதை உணரவேண்டியது மீதியுள்ள பெளத்த பாமர மக்களே. எடுத்து சொல்லுங்கள்.
ReplyDelete