Header Ads



டுபாயில் பெறுமதிக்க கார்களை பயன்படுத்தி கொள்ளலாம்..!

துபாயில் மோட்டார் திருவிழா  நவம்பர் 19-ம் தேதி தொடங்கி டிசம்பர் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் தொடர்ச்சியாக  பார்வையாளர்களை கவரும் வகையில்  மோட்டார் திருவிழா ஏற்பாட்டாளர்களால் துபாயில் புகழ்பெற்ற‌ ஷாப்பிங் மால், உள்ளிட்ட முக்கிய இடங்களில்  உலகின் விலையுயர்ந்த சூப்பர் கார் டாக்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நவம்பர் 21-,22, 28-,29 தேதிகளிலும் மற்றும் டிசம்பர் 5-,6 தேதிகளில் இக்கார்களில் இலவசமாக பயணிகளை  அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று மிகபெரிய ஷாப்பிங் சென்டரான‌ துபாய் மால் அருகில் விலையுயர்ந்த கார் நிறுத்தப்பட்டு பயணிகளை இலவசமாக அழைத்து சென்றனர்

இதற்காக ரோல்ஸ் ராய்ஸ் ,பென்ட்லி, பெர்ராரி, லம்போர்கின் உள்ளிட்ட இக்கார்கள் முக்கியமான சுற்றுலா இடங்கள், ஷாப்பிங் மால்கள்,பெரிய விளையாட்டு மைதானங்கள்  உள்ளிட்டவற்றில் நிறுத்தப்பட்டிருக்கும். ஆர்வமுள்ளவர்கள் உரியவர்களை அணுகி பயன்படுத்திகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.