Header Ads



கர்ப்பிணிகள் காபி குடித்தால் குழந்தைக்கு புற்றுநோய்..?

கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளில் இரண்டு கப் காபி குடித்தால் அவர்களின் குழந்தைகளுக்கு லுகேமியா பாதிப்பு ஏற்பட 60சதவீதம் வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. american of o Obstet-rics andGynaecology வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளில் இரண்டு கப் காபி குடித்தால் அவர்களின் குழந்தைக்கு ரத்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கர்ப்பிணிபெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு நாளைக்கு 4 கப்களுக்கு மேல் காபி குடிக்கும் கர்ப்பிணிபெண்களுக்கு இதே ஆபத்து 72சதவீதம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. காபியில் உள்ள கபைன் கருவின் செல்களில் டி என் ஏ மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றும் இதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமெனவும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.