மஹிந்தவுக்கு தோல்வி நிச்சயம் - இது விக்டர் ஐவனின் நம்பிக்கை
எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி நிச்சயம் என்று ராவய பிரதம ஆசிரியர் விக்டர் ஐவன் அறுதியிட்டுக் கூறியுள்ளார்.
நேற்றிரவு பீ.பீ.சி. சந்தேசய சிங்கள செய்திச் சேவைக்கு அளித்த நேர்காணலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். விக்டர் ஐவன் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
தற்போதைய நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி நிச்சயிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
எனினும் தில்லுமுல்லுகள் மூலம் நூலிழை வாக்குகள் வித்தியாசத்தில் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த வெற்றிபெற்றாலும் அந்த வெற்றி நிலைக்காது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் தான் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும். அதன் பின்னர் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுவிடும்.
தற்போதைய அரசியல் சூழலில் அதுரலியே ரத்ன தேரர் அருமையான சூழ்நிலை ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது எதிர்க்கட்சிகளின் சாமர்த்தியத்தில் தங்கியுள்ளது என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
.jpg)
நாட்டிலுள்ள அனைவரும் மிகவும் குறைந்தளவு சிந்திக்கக்கூடியவர்களே இந்த நிலைமையை உணர்ந்துள்ளார்கள், காரணம் தற்போதைய அரசாங்கத்தின் சர்வாதிகார ஆட்சி முறைதான். 65% வீதமான மக்கள் உணர்ந்துவிட்டார்கள், மீதி இருப்பது பெளத்தர்களின் ஒரு பகுதி மட்டுமே அவர்கள் பின் தங்கியவர்களில் உள்ளார்கள் அத்துடன் முஸ்லிம் கட்சித்தல்வர்கள் அவர்களைச்சொல்லத்தேவையில்லை. சுய நலத்துக்காக தமது சமுதாயத்தின் அழிவைக்கூட பொருட் படுத்தாதவர்கள். அவர்களுக்குரிய சரியான பதிலை தேர்தல்கள் வரும்போது கண்டிப்பாக மக்கள் காட்டுவார்கள் என்பதில் ஒரு துளிகூட சந்தேகமே இல்லை.
ReplyDelete