மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல்ஹூசெய்ன் இரட்டை நிலைப்பாடு கொண்டவர் - வெளிவிவகார அமைச்சர் பீரிஸ்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் இளவரசர் சயிட் அல் ஹூசெய்ன் இரட்டை நிலைப்பாடு கொண்டவர் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆணையாளர் இலங்கையின் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு இலங்கை ஆதரவளிக்காத காரணத்தினால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்ட போதிலும், ஏனைய ஒத்துழைப்பு வழங்காத நாடுகள் மீது இவ்வாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணைகளுக்கு உத்துழைப்பு ழவங்காத ஏனைய நாடுகள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அல் ஹூசெய்னின் இரட்டை நிலைப்பாடு அம்பலமாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைப் பேரவை போலியான முறையில் ஆதாரங்களை திரட்டுவதில் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே சாட்சியமளிக்கும் கால அவகாசம் பூர்த்தியானதன் பின்னரும் சாட்சியங்கள் திரட்டப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கால அவகாசம் நீடிக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
.jpg)
ஏனய்யா:? உங்களை உங்கள் நாட்டு மக்களே காறித்துப்புகின்றார்கள். உங்கள் பித்தலாட்டங்களை எல்லோரும் வெளிப்படையாக சொல்லுகின்றார்கள் ஆனால் உங்கள் அரசாங்கமும் அதில் தொங்கும் பொட்டை அரசியல்வாதிகளும் ஏன் இன்னும் உண்மையை ஏற்றுக்கொண்டு ஒதுங்கி நல்லதோர் ஆட்சிக்கு வழியை விட்டுக்கொடுக்களய்யா? பத்து வருடங்களாக கொள்ள சாப்பிட்டது, போத்தா?
ReplyDelete