Header Ads



ஜனாதிபதித் தேர்தலில் நாம் அனைவரும் மஹிந்தவை ஆதரிக்க வேண்டும் - அமைச்சர் அதஉல்லா

-பி. முஹாஜிரீன்-

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே மூன்றாவது முறையாகவும் அதிகூடிய விருப்பு வாக்குகளால் வெற்றி பெறுவார் என தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதஉல்லா தெரிவித்தார்.

மஹிந்த சிந்தனைத் திட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வாழ்வின் எழுச்சி செழிப்பான இல்லம் திவி நெகும பயனாளிகளுக்கு வீடு திருத்துவதற்கான ரூபா 2 ஆயிரத்து 500 முதற்கட்ட கொடுப்பனவு மற்றும் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் சுமார் 50 இலட்சம் ஓதுக்கீட்டின் மூலம் அக்கரைப்பற்று பள்ளிக் குடியிருப்பு பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் வைபவம் இன்று (18) பள்ளிக்குடியிருப்பு அல் பாயிஷா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆசியாவின் முதல் மனிதனாகத் திகழ்கின்றார். அவரது ஆட்சிக் காலத்தில் இலங்கை வரலாறு காணாத அபிவிருத்திகளைக் கண்டுள்ளதோடு, எங்களை நிம்மதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ வைத்துள்ளார். அவரை நாம் மறக்கக்கூடாது.

மஹிந்த சிந்தனைத் திட்டத்தில் எங்களது வாழக்கைத்தரம் உயர்வடைந்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை யார் எதிர்த்து நின்றாலும் நாம் அவருடனே இருப்போம். கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக ஆக்குவதற்கு தேசிய காங்கிரஸ் முன்னின்று உழைத்தது.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சுக்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் உள்ளுராட்சிப் பிரதிநிதிகளின் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதோடு சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கில்களும் வழங்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாம் அனைவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இவ்வைபவத்தில் அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ. றாசிக், அமைச்சர் அதாஉல்லாவின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்எம். பஹ்ஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

9 comments:

  1. எட்டப்பனின் தலைவன் மௌனம் கலைத்தது மட்டுமல்ல மஹிந்த சிந்தனை திட்டத்தில் எங்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது என்று முதல் முறையாக பகிரங்கமானதொரு உண்மையையும் ஒத்துக்கொண்டுள்ளார், இங்கே " எங்கள் வாழ்க்கைத் தரம்" என்று இவர் குறிப்பிடுவது, இவரதும், இவருடன் சேர்ந்திருக்கும் கொள்ளையர் கூட்டத்தையுமாகும். சிங்கிள் டீ குடிப்பதற்கு வக்கில்லாதிருந்த வாத்தியார் இப்போது சிம்மாசனம் வீற்றிருப்பது பல கோடிகளின் மேல், இவர் மட்டுமல்ல இவரைச் சார்ந்திருக்கும் கைத்தடிகளும் அப்படித்தான். அந்த வகையில் மஹிந்த சிந்தனை திட்டத்தில் எங்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது என்று கூறுவது முற்றிலும் உண்மை.

    ReplyDelete
  2. எமக்கு அபிவிருத்தி தேவையில்லை. நாட்டு மக்கள் நிம்மதியாகவே இருக்கவேண்டும். அது ஒன்றுமே போதும். சும்மா யாரும் புலுடா விடத்தேவையில்லை. முஸ்லிம்களின் வாக்கு மகிந்த கூட்டத்திற்கு கிடக்காது.

    ReplyDelete
  3. let see what will happen to mahinda crop

    ReplyDelete
  4. இந்த நாட்டில் முஸ்லீம்களுக்கு அபிவிருத்திதானா தற்போது தேவைப்படுகிறது? எந்த முஸ்லீமும் மஹிந்த அரசை ஆதரிக்க முடியாத் இக்கட்டன நிலையில் இருக்கும் போது அவர்தான் வெல்லுவார் என்றால் அவருக்குதான் வாக்குபன்னவேன்டும் என்று கருத்தா? இன்னாட்டில் உள்ள வாழ்க்கைசெலவை வசதிக்காரர்கள் அறியமாட்டர்கள். வாகனம் ஏ.சீ ரூம்களில் உள்ளவர்களுக்கு இது புரியாது. பொ.ப.சேனாவின் பிரச்சினை இவருக்கு தெரியாதா? பள்ளி உடைத்தல் பள்ளி அகற்றல்,, பர்தா, உள்ஹிய்யா, ஹலால், வெளிமாவட்ட முஸ்லீம் பாடசாலைகள், காணிக்கொள்ளை, ஒலுவில் ஆஸ்ரப் நகர், அக்கரைப்பற்று ஆலிம் நகர், பொத்துவில் காணி, வட்டமடு காணி, நிலாவெளிக்காணி, மூதூர் மற்றும் சேருவில எல்லைகாணி, கொழும்பில் சுற்றுபுறஙகளில் திட்டமிட்டு முஸ்லிம்களின் வீடுகள், காணிகளை கடைகளை பறித்தல், இப்படி எத்தனையோ விடயங்கள் தீர்க்கபடாமல் இருக்கையில் இவருக்கு வாக்களிக்க கோருவதா? மஹிந்தவின் சகோதரர்களால்முஸ்லீம்கள் நசிக்கப்படுவதை இவர் தடுத்தாரா? வெட்கமில்லாமல் இப்படிப்பேச இவரால் எப்படி முடியும், அக்கரைப்பற்று அரசியடியில உள்ள காணிப்பிரச்சினையை இவரால் தீர்க்கமுடியல இன்னும் இந்த அரசுக்கு வாக்கா? புஹ்....

    ReplyDelete
  5. வெட்கமில்லாத நயவஞ்சகர்கள் என்பது இவர்களைத்தான்.
    உரோசமுள்ள, ஈமானுள்ள எந்த முஸ்லிமும் இம்முறை இவர்களுக்குப்பின்னால் செல்லவே மாட்டான், உடைக்கப்பட்ட பள்ளிகளின் ஞாபகங்கள் இன்னும் எங்கள் நெஞ்சங்களை விட்டும் அகலவில்லை.

    பேருவலை,அலுத்கமவில் இறந்துபோன என் சகோதரர்களின் ஆத்மாக்களும் அவர்களின் குடும்பங்களும் இன்னும் சாந்தியடையவில்லை,கோடிக்கணக்கான சொத்திழப்புக்கள் இந்த மகிந்தவின் ஆட்சியிலயே முஸ்லிம்களுக்கு எதிராக நடந்துள்ளது. கேவலம் ஒரு பெண்ணின் ஆட்சிக்க்குபின்னர்தான் இவர்களின் அணைத்து ஆட்சிகளும் கூத்துக்களும். இருக்கும்வரைக்கும் மக்கள் கையேந்தி கும்பிடும் அளவுக்கு கௌரவமாக பதவியில் இருந்தார் முன்னால் பெண் ஜனாதிபதி.

    இப்படியான பொருளாதார நெறுக்கடி இலங்கை மக்களுக்கு ஒருபோதும் வந்ததில்லை, முன்னர் யுத்தம் யுத்தம் என பொய்காரணம் காட்டி, விலைவாசிகள் அனைத்தையும் உயர்த்தினார், இப்போ என்ன காரணமாம்?

    பேராசைக்கு அரச தொழில்களில் இருக்கும் அணைவரும் இப்போ வருமாணம் பற்றாக்குறையால் வெளினாடுகளுக்கு செல்ல உள்ளார்கள். மகிந்தவின் ஆட்சியில்தான் அதிகளவில் அரச ஊழியர்களின் ஆர்ப்பாட்டங்களும் பணிப்பகிஷ்கரிப்புக்களும் நடந்துள்ளது. ஆட்சிக்கு தகுதியில்லாத இவர்களுக்கு மீண்டும் ஆட்சி செய்ய நாம் ஒத்துழைப்பதா?

    இவரைப்போலவே ரவூப் ஹகீமும்,ஹிஸ்புல்லாஹ் உட்பட அணைவரினதும் நிலைப்பாடுகள் என்பதால், மக்களாகிய நீங்கள்தான் இவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும். உங்களின் துயர வாழ்விற்கு தப்பிக்க இறைவன் தந்த மாபெறும் வரப்பிரசாதமே எதிர்வரும் தேர்தல் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    "பரதேசி" தமிழ் சினிமா படம் பார்க்காதவர்கள் தேர்தலுக்கு முண்ணர் ஒரு தரம் பார்த்துக்கொள்ளுங்கள், அதில் உங்களைப்போல ஒரு சமுகத்தின் அவல நிலை அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  6. இன்றைய இலங்கை முஸ்லிம்கள் விடயத்தில் நிரந்தரமான வலுவான யாராலும் பிரிக்கமுடியாத ஒற்றுமைவேண்டும்.நம்சமுதாயத்தின் ஒற்றுமை இன்மையின் காரணமாகத்தான் ,இப்போது நம்மீது வரிசைக்கிரமமாக திட்டமிட்டு சாட்டப்பட்டுவரும்,குற்றச்சாட்டுகள் இன்றைய காலகட்டத்தில் நம் அரசியல் தலைவர்கள் விருப்பு வெ ருப்புகளை மறந்து சமூகத்துக்காக ஒற்றுமைப்படவேண்டும் .இல்லை என்றால் தற்போது பெரும்பான்மை சமுகத்தில் உள்ள சில முஸ்லிம் சமுக விரோத சக்திகள் நம் சமுகம் மீது தொடராக ,ஹலால் பிரச்சினை என்றும் மதரசாக்கள் எல்லாம் பயங்கரவாதத்தை உருவாக்கும் இடங்கள் என்றும் ,நம் பள்ளிவாசல்களை தப்பான வழிகாட்டி நிலையங்கள் என்றும் ,அபாயா பிரச்சினைகள் என்றும் ,தொடராக நம்மீது எதிர்ப்பு சொட்பிரயோகங்களும் நேரடியான அடாவடித்தனங்களும் வந்தவன்னமெஇருக்கிரது .
    எல்லாவற்றுக்கும் ஒரேகாரணம் நம் சமூகத்தின் அரசியல் தலைவர்களிடத்தில் ஒற்றுமை இல்லாததை அவர்கள் நன்கு அறிந்து வைத்து இருக்குறார்கள் .இது தொடர்ந்துபோகுமாக இருந்தால் நம்மீது அவர்கள் நேரடியான தாக்குதல்கள் நடத்தவும் பயப்பிடமாட்டர்கள். ஏன் என்றால் சென்ற காலங்களில் நமக்கு இருந்த அரசியல் பலம் அன்மாயில் நடந்து முடிந்த தேர்தல்கள் முடிவுகளை வைத்து பார்க்கும்போது ,பின்தங்கி இருக்கிறோம் .இன்னும் சொல்லப்போனால் பெரும்பான்மை இனத்தவர்களின் நம்மீதான எதிப்புகளள் அதிகரிக்கும் போது நம்மவர்கள் கோபம் கொல்வதல்லாம் நம் அரசியல் தலைவர்கள் மீதுதான் ஏன் என்றால் நம் தலைவர்கள் ஜனாதிபதி இடமோ பாராலமன்றத்திலோ அமைச்சரவை கூட்டத்திலோ வாய் திறக்கவில்லை .எமக்கு ஆக்கபூர்வமான முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை என்று எசிபேசுவது மட்டுமன்றி நம்மவர்களால் புதிது புதிதாக நிறுத்தப்படும் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகளை கலைத்து வாகளிப்ப்பதால் நமக்கு வரவேண்டிய பிரதிநிதித்துவம் மென்மேலும் குறைந்துகொண்டேபோகும் வாய்ப்பு அதிகரிக்கின்றது .அப்போது நம் அரசியல்வாதிகள் ஆளால் ஒருவருக்குஒருவர் மேடைபோட்டு தாக்கிபெசுவதுதான் வலிமுரைஆகிவிட்டது .அப்போது நம்மை ஒருகை பார்க்க கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் ,நம் எதிரிகள் இன்னும் ஒருபடி மேலேபோய் நம்மை தாக்குவதற்கு முயற்சி எடுக்கிறார்கள் .ஒரேஒரு கட்சியாக இருந்த நமவர்களின் கட்சி இப்போது பல கட்சியாக மாறி எந்த பிரதிநிதித்துவத்தையும் அதிகரிக்கவில்லை .மாறாக தனிக்கட்சியாக இருக்கும் பொது இருந்த பிரதிநிதித்துவம் கூட இப்போது இல்லை .அன்று இருந்த அரசாங்கங்களிடம் நக்கன்று தனி மரியாதை இருந்தது .இப்போது விரும்பினால் இரு விரும்பாவிட்டால் வெளியேறிப்போ ! என்று சொல்லும் அளவுக்கு நம்சமூகத்தின் தலை விதி மாறிவிட்டது .இதற்க்கு காரணம் யார் ?நம் அரசியல் தலைவர்களே
    நாம் ஒரு நாளும் எதிர்பார்க்க முடியாது நமக்கு எதிராக கிளம்பி இருக்கும் பெரும்பான்மையை சேர்ந்த மத வெறியர்களை தற்போதைய அரசு கட்டுப்படுத்தும் அல்லது ,இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து கைது செய்யும் என்று நாம் ஒருபோதும் நம்பமுடியாது அது ஒருநாளும் நடக்காது.
    ஏன் என்றால் இவர்கள் பெரும்பான்மை கட்சிகளின் வாக்கு வங்கிகள் இந்த வாக்கு வங்கிகளை இழந்துவிட எந்த பெரும்பன்மைக்கட்சிகளும் விரும்பமாட்டாது .இதை நாம் நன்கு புரிந்து கொள்ளவேண்டும் .
    ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அல்லது மூன்றாவது அணி ஓன்று ஆட்சிக்கு வந்தாலும் ,இந்த எதிர்ப்பு அலைகள் குறையும் என்று எதிர்பார்க்க முடியாது அது எப்போது முடியும் என்றால் ,சிறுபான்மைக்கட்சி ஒன்றின் ஆதரவோடு எந்த அரசாங்கம் அமைகிறதோ அப்போதுதான் இவர்கள் அவர்கள் அடக்கிவைப்பார்கள் என்பது மட்டும் உண்மை .
    சிங்கள ராவய ,ஜாதிக ஹல உறுமய ,போது பல சேனா ,ஆகிய இம்மூன்றும் நமக்கு எதிராக செயல்படுவதற்காக ஒற்றுமைப்பட்டு இருக்கிறார்கள் .
    இன்னும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் பல பிரிவுகளாக பல கட்சிகளாக இருந்தவர்கள் இன்று தனிப்பட்ட ஆசைகளல்லாம் விட்டுவிட்டு தன து சமூகத்தின் எதிர்காலத்துக்காக ஒன்றுபட்டு இருக்கிறார்கள் .தற்போது சாதித்தும் காட்டிவிட்டார்கள் .
    இதுவாவது நம க்கு முன்மாதிரியாக தெரியவில்லையா?
    நமக்கு யாருடைய முன்மாதிரியும் அவசியம் இல்லை நம் கையில் அல்குரானும் அல்ஹதிசும் வழிகாட்டியாக இருக்கும் போது ஏன் நாம் வழி தவரிப்போகிறோம் மன இச்சை நம் மை வாட்டிவதைகிறது .
    ரசூல் (ஸல் )அவர்களின் மரணத்தின் பின் இஸ்லாமிய ஆட்சித்தலைவரை (ஹலிபாவை ) தெரிவு பிரச்சினை ஈரப்பட்ட போது மக்காவாசி மதீனாவாசி என்ற பாகுபாடு வந்தபோது எவ்வாறு தீர்த்து கொண்டார்கள் ,எதனை முன்மாதிரியாக கொண்டு ஒற்றுமப்பட்டார்கள் .?குரானையும் அல்ஹதீசைய்ம் முன் நிறுத்தினார்கள் தீர்வைக்கண்டார்கள்

    ReplyDelete
  7. ஏன் அவர்கள் அல்குரானையும் அல்ஹதீசையும் பின்பற்றினாலும் ,எதிகால சமுதாயத்தை கருத்தில் கொண்டார்கள் .அன்று அவர்கள் சகிப்புத்தன்மையும் பொறுமையும் காக்காமல் இருந்து இருந்தால் இன்று நாமல்லாம் சிறந்த முஸ்லிமாக இருக்கமுடியாது .அன்று அவர்கள் காட்டிய ஒற்றுமையும் பொறுமையும்தான் ,இன்றுவரை சில அரபு நாடுகள் மன்னர் ஆட்சிகளை தக்கவைத்துக்கொண்டு இருக்கிறது .அவர்களிடத்தில் சில பல பிரச்சினைகள் உண்டு அது இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழித்தொழிக்கும் பிரச்சினைகள் அல்ல.அங்கு யார் ஆட்ச்சிக்கு வந்தாலும் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் பிரச்சினை இல்லவேயில்லை .

    ReplyDelete

Powered by Blogger.