வானில் சிறிய விமானங்களை சுமக்கும், ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது
விமானம் தாங்கி கப்பல் போன்று வானில் சிறிய விமானங்களை சுமந்தபடி பறக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது.
தற்போது பல நாடுகள் விமானம் தாங்கி கப்பல்களை வைத்துள்ளன. நடுக்கடலில் கப்பலில் தரை இறங்கும் போர் விமானங்கள் அங்கிருந்து பறந்து சென்று குண்டு வீச்சு நடத்துகின்றன. அதே போன்று தற்போது விமானம் தாங்கி விமானத்தை அமெரிக்கா தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த ராட்சத சரக்கு விமானத்தின் மீது சிறிய ரக விமானங்கள் டிரோகன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் தரை இறங்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.
விண்ணில் பறக்கும் ராட்சத விமானத்தில் இருந்த படியே அந்த சிறிய ரக விமானங்கள் உளவு பணி மேற்கொள்ளும் தேவைப்பட்டால் தாக்குதலும் நடத்தும். தனது பணி முடித்தவுடன் மீண்டும் அந்த விமானங்கள் ராட்சத விமானத்தில் தரை இறங்கும்.
இந்த விமானத்தை அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் வடிவமைக்கிறது. இது போன்ற காட்சி தி அவெஞ்சர்ஸ் என்ற ஆலிவுட் படத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
ஸ்டார் கிராப்ட்’ என்ற வீடியோ கேமிராவும் இது போன்ற காட்சிகளை பார்க்க முடியும். இந்த திட்டம் தற்போது முதன் முறையாக முயற்சி அல்ல என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1920–ம் ஆண்டுகளில் இது போன்ற மிக சிறிய ரக விமானம் தயாரிக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன. 1930–ம் ஆண்டுகளில் அமெரிக்க கடற்படை 2 விமானம் தாங்கி விமானங்களை தயாரித்து சோதனை நடத்தின.
அப்போது அவை விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் பல விமான சிப்பந்திகள் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து அந்த சோதனைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

Post a Comment