பொதுபல சேனா குறித்து, முஸ்லிம்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் - ஞானசார
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாம் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படவில்லை எனவும் சிலரது பொய்யான பிரசாரங்களால் முஸ்லிம் சமூகம் தமது அமைப்பைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தாம் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் இல்லை. முஸ்லிம் சமூகத்திடையே காணப்படும் தமது அமைப்புத் தொடர்பான தப்பபிப்பிராயம் களையப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
தமிழ் இந்துக்களுடன் நாம் நல்லுறவைப் பேணி வருகின்றோம். அவர்களுக்கும் எமக்குமிடையே எந்தவிதமான கருத்து வேறுபாடும் வந்ததே கிடையாது. ஆனால் எமது அமைப்பைச் சிலர் திட்டமிட்டு முஸ்லிம் மக்களுடன் பிரித்து வைத்துள்ளனர். அது தவறு என்பதை முஸ்லிம் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நாம் தீவிரவாத அமைப்பை நடத்தவில்லை. பெளத்த மதத்தைப் பாதுகாத்து வளர்ப்பதே எமது நோக்கம். அதற்குத் தடையாக வருவோரை மட்டுமே நாம் எதிர்க்கிறோமே தவிரவும் ஏனைய மதங்களையோ அல்லது எந்தவொரு இனத்தையோ அடக்கியாள்வது எமது நோக்கமல்ல. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை நாம் மதிக்கிறோம் எனவும் அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரியை தோற்கடிக்க தமது அமைப்பு முழு பலத்தையும் பயன்படுத்தும். நாடு முழுவதும் சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு பிரசாரத்தில் நாம் ஈடுபடுவோம். ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவை வழங்கி நாட்டை சூழ்ச்சியில் இருந்து பாதுகாப்பதே தமது நோக்கம் என்றார்.
2009 ஆம் ஆண்டு அடக்கப்பட்ட பயங்கரவாதம், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் தலைதூக்கும் சாத்தியம் உள்ளதாக பொதுபல சேனா அமைப்பு கருதுகிறது. விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது, அவ்வியக்கம் அழிக்கப் பட்டுள்ள போதிலும், சர்வதேச ரீதியில் புலிகளுக்கு ஆதரவான சக்திகள் செயற்பட்டு வருவதாத் தெரிவித்த ஞானசாரதேரர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளர் வெற்றிபெற்றால், புலிகள் மீண்டும் உயிர்பெறும் சாத்தியம் இருப்பதாகவும் கூறினார்.
முதலில் நாடு, இரண்டாவது இனம், மூன்றாவது மதம் இவற்றை கவனத்தில் கொண்டு மற்றும் இனத்தின் பாதுகாப்பு குறித்து எண்ணியே, மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதான தீர்மானத்தை பொது பல சேனா எடுத்தது. எமது அமைப்பின் கருத்து அரசியல் அல்ல. எனினும் சகலருக்கும் செவி கொடுக்கப்படும். எதிர்க்கட்சிகளின் அணியில் இருப்பவர்கள் பொய்யர்கள் எனவும் அவர் கூறினார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் திரும்பிப் பார்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றோம். பொது எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் பற்றிய பெரிய சாட்சியங்கள் உள்ளன. எதிர்வரும் காலத்தில் அவை வெளியிடப்படும். மைத்திரிபாலவின் இருபுறங்களிலும் முதல் சீடர்கள் இருவர் இருக்கின்றனர். தேசிய பாதுகாப்பைத் தொடர்ந்தும் உறுதிப்படுத்தும் வேட்பாளருக்கு எமது ஆதரவு வழங்கப்படும். வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணியாத மற்றும் லிபரல் வாதத்தினால் தலைவீங்கிப் போன அணிக்கு ஆதரவு வழங்கப்படாது எனவும் ஞானசார தேரர் மேலும் தெரிவித்தார்.

இவன் ஒரு எட்டப்பெண்ட கூலிப்படை..
ReplyDeleteENNDA NAYA who was burned alluthgama. Unda appana.You are a yahoothi.Not only you,who are the politicians support to mila( Mahinda)
ReplyDeleteannada onda sathathaye kanamendu pathom .. wanthuttiyaada anda wendru????
ReplyDeletenee wantha waliye thirumbi poda anda kandru..
OK OK, Go all over the country and ask to support for you Mahinda... oya kariyan.
ReplyDeleteeven if you go to any country that will not effect to became president bastard Mahinda..
Nana sera...! who will provide visa for you to America the banned you.....
என்ன எலி அம்மணமா ஓடுது?
ReplyDeleteஉன்னுடைய. பெய்யான. பிரச்சார த்தை நாங்கள் நம்ப தயாராக இல்லை உன்னுடைய ஆட்டம் எல்லாம் முடிந்து விட்டது. GOOD. BYE.
ReplyDeleteசர்வ வல்லமை மிக்க அல்லாஹ்வின் பெயரை பொம்மை செய்து பாதையில் இழுத்துத் திரிந்த கயவர் கூட்டமே!
ReplyDeleteமுஸ்லிம்களின் கடைகளுக்கு தீ மூட்டி பொருளாதாரத்தை அழிக்கத் துடித்தவனே!
பள்ளிவாசல்களில் நிம்மதியாக இறைவனைத் தொழ இடமளிக்காது கொடூரங்களை அரங்கேற்றிய கேடு கெட்டவனே!
தர்கா நகரில் கோரத் தாக்குதலுக்கு அத்திவாரமிட்ட நாயே!
முஸ்லிம்கள் மற்ற மதத்தினருக்குக் கொடுக்கும் உணவுகளில் எச்சில் துப்பிக் கொடுக்குமாறு அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதாக அண்டப் புழுகிய பொய்யனே!
ஹலால் விவகாரத்தைப் பூதகமாக்கிய முஸ்லிம்களின் துரோகியே!
பெண்களின் ஹிஜாபை தடை செய்யக் கோரிய கள்ளக் கபடனே!
இத்தனை அநீதிகளையும் கட்டவிழ்த்த உனக்கு முஸ்லிம்களுடன் நான் எதிர்ப்பு இல்லை என்று கூற கடுகளவாவது உனக்கு வெட்கம், மானம் இல்லையா?
இவை தானா உனது பௌத்தத்தை பாதுகாக்கும் விதம்
கேடு கெட்ட நாயே உன்னை தாளாட்டி வளர்த்த மஹிந்தவுக்கு எமது முஸ்லிம்கள் எந்த மன உணர்வோடு வாக்களிப்பார்கள்? நீயும், உன்னை வளர்த்தவனும் நாசமாகிப் போ,
Allah (Subahaanavutala) Looking You and your Group Something Will Be happen Soon Insa Allah We don't Care you and What your Talking
ReplyDeletePlease Make Du a Every Muslims Sisters and Brothers For Our Election Success