Header Ads



கண்டியில் ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்பு ஆர்பாட்டம்

(JM.Hafeez)

வத்தேகம நகர சபை ஐ.தே.க. அங்கத்தவர் ஒருவரது வீடு தாக்கப்பட்டமையை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளு மன்ற அங்கத்தவர்கள்  எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

(23.11.2014) வத்துகாமம் பிரதான பஸ்தரிப்பில் இடம் பெற்ற இவ் ஆர்பாட்டத்தில் கண்டி மாவட்டப் பாராளு மன்ற அங்கத்தவர்களான லக்ஸ்மன் கிரியல்ல, எம்.எச்.ஏ.ஹலீம், மற்றும் முன்னாள் பாராளுமன்ற அங்கத்தவரும் தற்போதைய மாகாண சபை அங்கத்தவருமான திருமதி சித்ரா மன்திலக, வத்துகாமம் நகர சபை அங்கத்தவர்கள், பாத்ததும்பறைப் பிரதேச சபை அங்கத்தவர் றஹ்மத்துல் மலீக் உற்பட இன்னும் பெருமளவு உள்ளுராட்சி அங்கத்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

(22.11.2014) இரவு சுமார் 10 மணியளவில் வந்த ஐந்து அல்லது ஆறு பேரைக் கொண்ட ஒரு கோஷ்டி தமது வீட்டிற்கும் வாகனத்திற்கும் சேதம் ஏற்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றதாக நகர சபை அங்கத்தவர் தனுஷ்க லியனகே தெரிவித்தார். இதனால் தமது வீடம் வாகமும் சேதமடைந்துள்ளதாகவும் இதற்கு அரசியல் பின்னணி இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

வத்துகாமம் உடுராவன என்ற இடத்தில் இவரது வீடு அமைந்துள்ளது. தற்போது அமைதி நிழவுகிறது. வத்துகாமம் பொலீசார் இது தொடர்பாக விசாரணைகனை மேற்கொண்டு வருகின்றனர். ஆர்பாட்டத்தின் போது பூரண பாது காப்புக்கள் போடப்பட்டிருந்தன.


No comments

Powered by Blogger.