பள்ளிவாசலில் புலிகள் மேற்கொண்ட அக்கிரமம் - அமெரிக்க குழு பார்வையிட்டது (படங்கள்)
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
கடந்த 03-08-1990 ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இஷாத் தொழுகை நிறைவேற்றிக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள்; நடாத்திய தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலுக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயத்தின் பொது மக்கள் தொடர்பாடல் அதிகாரி திருமதி. நிகோலி சுலிக்ஸ் தலைமையிலான குழுவினர் (18-11-2014) இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்தனர்.
அங்கு விஜயம் செய்த அக்குழுவினரை மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலின் தலைவரும்,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவருமான எம்.ஐ.எம்.சுபைர் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.
இதன் போது தொழுகை நிறைவேற்றிக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடாத்திய இடத்தையும், மரணித்தவர்களின் பெயர் பட்டியலையும் பார்வையிட்டனர்.
காத்தான்குடி பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் மற்றும் ஹூஸைனியா பள்ளிவாயல்களில் கடந்த 03-08-1990-திகதி வெள்ளிக்கிழமை இரவு இஷாத் தொழுகை நிறை வேற்றிக்கொண்டிருந்தபோது 103 முஸ்லிம்கள் பாஸிசப் புலிகளினால் கொடூரமாக கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Be Aware of These ........, They are the main reason for creating problems to all Muslim countries around the world. How many times Palestine goodwill resolution came to table at UN and count How many time these ...... voted in favour of Isreal ?
ReplyDeleteWe Muslim have problem in SriLanka by few member of current government.. But Do not trust these ......... will help you... They are Wild Foxes shading tears for calf. They are here to benefit themselves and to destroy harmony in SriLanka.
History tells what type of people they are...
May Allah bring you peace, trust in Allah and ask him alone and approach Good people who will really care for us.