Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆதரவை மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கும் - பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா

 நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முஸ்லிம் மக்கள் அனைவரும் தமது பூரண ஆதரவை வழங்குவர் என தெரிவித்த பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர்  எம்.எல். ஏ.எம். ஹிஸ்புல்லா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் தனது ஆதரவை வழங்கும் என்ற  நம்பிக்கை உள்ளதாகவும்  தெரிவித்தார். 

  கொழும்பில் இன்று 18-11-2014 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பிரசியமைச்சர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,  வடக்கு மற்றும் கிழக்கில் காணப்பட்ட பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்து பாரிய அபிவிருத்திகளை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கும் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுகின்றது.  

 தமிழ் முஸ்லிம் மக்கள்  அதாவது கடந்த காலத்தில் புலிகளுடன் போரில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது தேர்தல் இடம்பெற்றது. இதன்போது பெரும்பாலான தமிழர்கள் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்தனர். ஆனால் தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கிழக்கில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமது பூரண ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்குவர்.  மேலும் அண்மையில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் கிழக்கில் உள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

4 comments:

  1. CONGRAS AATHARAVU THARUM,B/T EEMAAN ULLA MUSLIM UNNAIPPOOL ......KOOTTI KODUKKA MATTAAN

    ReplyDelete
  2. இன்று முஸ்லீம்களின் பொருளாதாரம் திட்டமிட்டு படிப்படியாக அழிக்கப்படுகின்றது நகர அபிவிருத்தி என்ற பெயரிலும் இறக்குமதியின் போது சுங்கத்தீர்வை என்ற பெயரிலும் நகரங்களில் காணப்படும் அருங்காட்சியங்கள் மதவாதம் என்ற பெயரிலும் வங்கிக்கணக்குகளை பரிசோதித்து வரி என்ற பெயரிலும் சிறு வியாபாரங்கள் நடை பாதை அபிவிருத்தி என்ற பெயரிலும் அதே போல மதவாத நச்சுக்கருத்துக்களை பரப்பி முஸ்லீம்களின் நிறுவனத்திற்கு போக விடாமல் தடுத்து எவ்வாறாகினும் இச்சமூகத்தின் பொருளாதாரம் கடந்த சில தசாப்த காலங்களை விட படிப்படியாக அழித்து வருகின்றது இத்தனைக்கும் நீங்கள் பொருளாதார பிரதி அமைச்சர் என்ற வகையில் முஸ்லீம்கள் வெட்கப்பாடல் வேண்டும் அரசியல் செய்யும் போது அல்லாஹ்வுக்காக என்ற நிய்யத்துடன் மட்டுமே செய்யுங்கள் இல்லெயெனில் மறுமையில் அல்லாஹ்வின் பிடி மிகவும் கடினமானது சுய நலனுக்கும் ஆடம்பர வாழ்வுக்கும் சுகபோகங்களுக்காகவும் நீங்கள் விலை போவது மட்டுமல்லாமல் இந்த முஸ்லீம் சமூகத்தினையும் விலை பேசி விற்க நினைத்தால் அது ஒரு போதும் நடக்காது நீங்கள் சொல்லும் யுத்த சூழ்நிலை அற்ற ஒரு நிலைமையை உருவாக்கியது என்பது உண்மை அதற்காக பொது மக்களின் பணத்தினை கொள்ளயடிப்பதட்காக அபிவிருத்தி எனும் பெயரில் பாதைகளை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி இருப்பதற்காக இவ்வரசை முஸ்லீம்கள் ஆதரிக்க வேண்டும் என்ற உங்கள் கருத்தானது நடைமுறை இலங்கையின் ஒரு உண்மையான முஸ்லிமின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது முழு பூசனிக்காவையும் சோற்றில் மறைப்பது போல முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட மதவாத பிரச்சனைகளை மறைத்து அவ்வாறு ஒன்று நடக்கவில்லை என்றால் போல கருத்து வெளியிடுவதானது உங்களது சுயநலனை மிக தெளிவாக பிரதி பலிக்கின்றது எனவே உங்களையும் என்னையும் படைத்த அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறையில் அஞ்சி கருத்து வெளியிடவும் இல்லெயெனில் எந்த சுய நலனுக்காக எந்த குடும்ப ஆட்சிக்காக பிர்அவ்னும் அவனது கூட்டமும் அழிக்கப்பட்டார்களோ அதே போல செயல்பட கூடிய ஆட்சியாளர்களையும் அழிக்க அல்லாஹ்வுக்கு யாருடைய உதவியும் தேவைப்படாது வல்ல ரஹ்மானே அனைத்து உள்ளங்களிலும் உள்ளதை அறிகிறவன் உங்களுக்கும் உங்கள் போன்ற அமைச்சர்களுக்கும் மற்றும் நம் அனைவருக்கும் இஸ்லாமிய சமூகத்தின் உண்மையான சமூக பற்றை வல்லோன் தந்தருள்வானாக

    ReplyDelete
  3. மற்றொரு கோடரிக்காம்பு. இன்னொரு எ ட்டப்பன் மஹிந்த சிந்தனை திட்டத்தில் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்ட கொள்ளைக்காரன்.

    ReplyDelete
  4. கண்ணியம் கேட்டு நிற்கும் மக்களுக்குரிய பதிலை மக்களிடம் இருந்து எதிர்பார்ப்பதுதான் சரியான விடயம், அந்த வகையில் இந்த நபர் தேடிவைத்துள்ளதை மேலே கவனித்தால் புரிகின்றது. உமக்கெல்லாம் மரண பயம் இல்லையா?

    ReplyDelete

Powered by Blogger.