நான் வெற்றிபெறுவது உறுதியானது - ஜனாதிபதி மஹிந்த நம்பிக்கை
ஜனாதிபதித் தேர்தலில் எவர் போட்டியிட்டாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னம் வெற்றிபெறுவது உறுதியென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
வெற்றிலையின் வெற்றியில் எந்த சிக்கலுமில்லை என தெரிவித்த ஜனாதிபதி எதிர்க் கட்சி சார்பாக போட்டியில் களம் இறங்கப் போவது யார் என நாம் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.
பிலியந்தலையில் நிலவும் வாகன நெருக்கடியை போக்கும் விதத்தில் பிலியந்தலையிலிருந்து கெஸ்பேவ வரை புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீதியை உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ள வெற்றியை மலினப்படுத்த தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சக்திகள் கங்கணம் கட்டிக் கொண்டு செயற்பட்டு வருகின்றன. அதற்கு ஒரு போதும் நாம் இடமளிக்கப் போவதில்லை.
பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை பாதுகாத்து முன்னெடுத்துச் செல்வ தற்கு அனைவரும் இணைந்து செயற் படுவது முக்கியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். யுத்தம் முடிவுற்று குறுகிய காலத்திலேயே நாட்டில் பாரிய அபிவிருத்தி நடைபெற்றுள்ளது. இன்றைய அரசாங்கம் நாட்டுக்கு வளங்களை சேர்த்ததே தவிர நாட்டு வளங்களை விற்க வில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
800 மில்லியன் ரூபா செலவில் மேற்படி வீதி நிர்மாணிக்கப்பட்டுள் ளதுடன் இந்நிகழ்வில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டனர். அமைச்சர்கள் காமினி லொக்குகே நிர்மல கொத்தலாவல உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Post a Comment