சம்மாந்துறை எம்.எம்.ஸலீம் எழுதிய 'காமரி முதல்' கிராம நிலதாரி வரை' நூல் வெளியீட்டு விழா
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
சம்மாந்துறை எம்.எம்.ஸலீம் (ஜே.பி) எழுதிய காமரி முதல் கிராம நிலதாரி வரை எனும் நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக் கிழமை (16) வெள்ளவத்தை தமிழ் சங்கத்தில் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில் சம்மாந்துறை தேசிய பாடசாலை முன்னாள் அதிபர் எம்.ஏ.பாறுக் தலைமையில் இடம் பெற்றது.
நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழ ஸ்தாபக உபவேந்தர் எம்.எல்.ஏ. காதர் பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதியாக முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் அமீர் இஸ்மாயிலும், விஷேட அதிதிகளாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.எச்.எம்.ஜெமீல், மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீட் ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக சமுக ஜோதி ரபீக், எம்.எல்.மக்கீன், தேசமான்ய, தேசபந்து ஏ.பி. அப்துல் கய்யூம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்வில் வரவேற்புரையை மௌலவி ஏ.எல்.எம்.கலீலும், தலைமை உரையை எம்.ஏ.பாறுக்கும், நூல் அறிமுகத்தை சம்மாந்துறை தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் எம்.எச். அன்வர் அலியும், நூலின் நயவுரையை தென் கிழக்குப் பல்கலைக்கழக பிரதிப் பதிவாளர் மன்சூர் ஏ காதிரும் கிண்ணியா அமீர் அலி கவி வாழ்த்தினையும் வழங்கியதுடன் பிரதம அதிதியின் உரையைத் தொடந்து நூலாசிரியர் எம்.எம்.ஸலீம் ஏற்புரையையும் நன்றியுரையை எம்.எல்.எச்.முபாறக்கும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி நிகழ்வில் முதற் பிரதியை புரவலர் ஹாசிம் உமருக்கு பிரதம அதிதி எம்.எல்.ஏ. காதர் வழங்கி வைப்பதையும் அதிதிகளுக்கான பிரதிகளை நூலாசிரியர் வழங்கி வைப்பதையும் ஏனையோருக்கான பிரதிகளை அதிதிகள் வழங்கி வைப்பதையும் நூலாசிரியருக்கு பிரதம அதிதியால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படுவதையும் படங்களில் காணலாம்.


Post a Comment