அரசியல் பழிவாங்கல், அவதூறு செய்தல் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கை அல்ல - மஹிந்த
அரசியல் பழிவாங்கல் மற்றும் அவதூறு செய்தல் என்பன தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கை அல்லவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார்
நாட்டை நேசிக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டை கட்டியெழுப்புவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திற்கு நீர் நிரப்பும் நடவடிக்கையை ஆரம்பித்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்பு கிடைத்திருந்தால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முன்பே இரத்து செய்திருக்கலாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

செய்வதையெல்லாம் செய்துவிட்டு, பேச்சுக்கு ஒன்றும் குறைவில்லை. மக்களுக்கு செய்த அனீதிக்கும், அல்லாஹ்வை மறந்து செயற்பட்டமைக்கும், அவனது இல்லங்களை உடைக்க உறுதுணையாக இருந்தமைக்கும் அல்லது மக்களின் தலைவன் என்ற பெயரில் அதை தட்டிக்கேட்காமல் இருந்த்தற்கும் அல்லாஹ்வின் அருள்வாக்கான அல் குர் ஆனை கண்ட தெரு நாயெல்லாம் இழிவு படுத்தும் போது நடு நிலை வகிக்காமல் எல்லாவற்றையும் அப்பாவி மக்களின் தலையில் போட்டுவீட்டு தனது இலாபத்தை மட்டும் பார்த்த உமது குடும்பத்தினருக்கு. அல்லாஹ்விடம் இருந்து நல்லதொரு தீர்பு வந்து கொண்டிருக்கின்றது என முஸ்லிம்கள் நம்புகின்றோம். அவனிடம் நாம் கேட்ட பிரார்த்தனைகளுக்கும் நாம் அவனை நம்பியதற்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் எம்மை கைவிடமாட்டான். இன்னும் நாம் பிரார்த்தித்துக்கொண்டேதான் இருக்கின்றோம்.
ReplyDelete